இந்த ஆண்டு இறுதிக்குள் 10 மில்லியன் மலிவான Android Smartphone அறிமுகப்படுத்தும் Jio

ஸ்மார்ட்போன் சந்தையில் கால் பதிக்கும் முகேஷ் அம்பானி.. இனி சியோமி, ஒப்போ, விவோ போன்களுக்கு பாய்.. பாய். இந்த ஆண்டு இறுதிக்குள் 10 மில்லியன் மலிவான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2020, 11:00 AM IST
  • இந்தியாவில் மலிவான ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய சந்தை உள்ளது.
  • இந்த ஆண்டு இறுதிக்குள் 10 மில்லியன் மலிவான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தப்படும்.
  • ஜியோவின் மலிவான 4 ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 10 மில்லியன் மலிவான Android Smartphone அறிமுகப்படுத்தும் Jio title=

Reliance 4G Android Smartphone: நீங்கள் மலிவான 4G ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், உங்கள் தேடல் விரைவில் முடிவடையப்போகிறது. உண்மையில், மலிவான தரவு மற்றும் கால் அழைப்பு என தொலைத் தொடர்புத் துறையையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Telecom Unit), இப்போது ஸ்மார்ட்போன் சந்தையில் தனது பயணத்தை மேற்கொள்ள தயாராக உள்ளது. 

ரிலையன்ஸ் ஜியோ இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 10 மில்லியன் மலிவான 4 ஜி ஸ்மார்ட்போன்களை (Smartphone) நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளது என்று தெரிவித்துள்ளது. அதனுடன் கூடுதலாக தரவு திட்டங்களையும் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. 

ALSO READ |  Reliance Jio-வின் இந்த அம்சத்தால், மொபைலில் நெட்வொர்க் இல்லாமலும் WiFi மூலம் கால் செய்யலாம்!!

கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உருவாக்கப்படும்:
இந்த தொலைபேசிகள் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் (Google) ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தயாரிக்கப்படும். ஜியோவின் மலிவான 4 ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்படும் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி பிசினஸ் ஸ்டாண்டர்டு தெரிவித்துள்ளது. ஜூலை மாதம், கூகுள் ஜியோவில் 4.5 பில்லியன் டாலர் முதலீட்டை அறிவித்தது. கூகுள் மலிவான ஆண்ட்ராய்டு போன் தயாரிப்பதில் ஈடுபட்டு உள்ளது என்றும், அதன் அடிப்படையில் மலிவான தொலைபேசியை வழங்கும் என்றும் ஜியோ கூறியிருந்தார்.

ALSO READ |  ரிலையன்ஸ் Jio Fiber vs Airtel Xstream: வரம்பற்ற தரவைக் கொண்ட சிறந்த திட்டம் எது?

சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டியிடும்:
இந்தியாவில் மலிவான ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய சந்தை உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தற்போது, ​​சீன ஸ்மார்ட்போன் சியோமி (Xiaomi), ரியல்மீ (Realme), ஒப்போ (Oppo) மற்றும் விவோ (Vivo) போன்ற நிறுவனங்கள் ஜியோ ஸ்மார்ட்போனிலிருந்து நேரடி போட்டியைப் பெறும். சீன நிறுவனங்களைத் தவிர, சாம்சங்கின் வணிகங்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் 2 பில்லியன் டாலர் ஸ்மார்ட்போன் சந்தையை சீன நிறுவனங்கள் வைத்திருக்கின்றன என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். 

ALSO READ |  WOW... இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் மூலம் IPL லைவ் ஸ்ட்ரீமிங்கை இலவசமா பார்க்கலாம்!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அம்ச தொலைபேசி:
ரிலையன்ஸ் 2017 ஆம் ஆண்டில் ஜியோ ஃபோனை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்த பிரிவில் நுழைந்தது. ஜியோ (Jio Phone) தொலைபேசியில் இப்போது 100 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர், அவர்களில் பலர் முதல் முறையாக இணைய பயனர்கள். ஜியோ தொலைபேசி 4 ஜி ஆதரவையும் கொண்டிருக்கும். இதன் ஆரம்ப விலை ரூ .939 வரை இருக்கலாம்.

Trending News