SBI Amrit Vrishti Scheme: மூத்த குடிமக்கள், குறிப்பாக ஓய்வூதியம் இல்லாதாவர்களுக்கு, நல்ல வட்டி வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்கள் ஒரு வரப்பிரசாதம் எனலாம். பல வங்கிகள், தபால் அலுவலகங்களில் அதிக வட்டி விகிதங்களுடன் மூத்த குடிமக்களுக்கு என பிரத்யேக திட்டங்கள் உள்ளன. அந்த வகையில், முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்கும் மூத்த குடிமக்களுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுக்கும், அம்ரித் விருஷ்டி திட்டம் குறித்த விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு 'அம்ரித் விருஷ்டி திட்டத்தை' வழங்குகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு குறுகிய காலத்தில் நல்ல வட்டி விகிதத்தில் வருமானம் ஈட்ட வாய்ப்பளிக்கிறது. இந்தத் திட்டம் ஜூலை 16, 2024 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இந்தத் திட்டத்தில் மார்ச் 31, 2025 வரை முதலீடு செய்யலாம். அதாவது இந்த திட்டத்தில் சேர இதுவே கடைசி நாள்.
எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி திட்டம் குறித்த விபரங்கள்
1. அம்ரித் விருஷ்டி திட்டம் ஒரு டெர்ம் டெபாசிட் திட்டம். இதன் முதலீட்டுக் காலம் 444 நாட்கள்.
2. இந்த திட்டத்தில், பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 7.25% வட்டி கிடைக்கும்.
3. மூத்த குடிமக்கள் 7.75% வட்டி விகிதத்தின் பலனைப் பெறுவார்கள்.
4. உள்நாட்டு மற்றும் என்ஆர்ஐ வாடிக்கையாளர்கள் இந்தத் திட்டத்தின் பலனைப் பெறலாம்.
5. உங்கள் தேவைக்கு ஏற்ப மாதாந்திர, காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் வட்டி வழங்கப்படும்.
மேலும் படிக்க | SIP Mutual Fund: ஓய்வு பெறும் போது கையில் ரூ.6 கோடி... மாதம் ரூ.6000 முதலீடு போதும்
6. நீங்கள் அதிகபட்சமாக ரூ.3 கோடி வரையும், குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரையும் டெபாசிட் செய்யலாம்.
7. திட்டத்தின் முதிர்ச்சி காலத்திற்கு முன்னரே பணத்தை எடுத்தால், அபராதமாக 1 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
8. ₹5 லட்சம் வரையில் திரும்ப பெறும் டெபாசிட்களுக்கு 0.50% அபராதம்.
9. ₹5 லட்சம் முதல் ₹3 கோடி வரையிலான டெபாசிட்களுக்கு 1% அபராதம்.
கடன் வசதி மற்றும் வரி
இத்திட்டத்தின் கீழ், டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு எதிராக கடன் பெறலாம். TDS வட்டியில் கழிக்கப்படும்.
முதலீடு செய்யும் முறை
SBI கிளைகள், YONO SBI மற்றும் YONO Lite மொபைல் பயன்பாடுகள் அல்லது இணைய வங்கி மூலம் முதலீடு செய்யலாம். அம்ரித் விருஷ்டி திட்டம் குறுகிய கால சேமிப்பு மற்றும் நல்ல வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு ஒரு சிறந்த வழி. இருப்பினும், முதலீட்டை புதுப்பிக்கும் வசதி இல்லாததால் நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ