SBI முக்கிய செய்தி: சில நிமிடங்களிலேயே மொபைல் மூலமே கணக்கை திறக்கலாம்

இப்போது SBI-யில் கணக்கை திறக்க விரும்பினால், மொபைல் மூலம் எளிதாக கணக்கைத் திறந்து விடலாம். வங்கிக் கணக்கைத் திறக்க வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 8, 2021, 01:47 PM IST
  • ஸ்டேட் பாங் ஆஃப் இந்தியா, அவ்வப்போது மக்களுக்கு பலவித புதிய நன்மைகளை அளித்து வருகிறது.
  • புதிதாக வங்கி கணக்கு திறக்கவுள்ள வாடிக்கையாளர்களுக்கும் பல வித சலுகைகளையும் வசதிகளையும் வங்கி அளிக்கின்றது.
  • SBI-யில் கணக்கை திறக்க விரும்பினால், மொபைல் மூலம் எளிதாக கணக்கைத் திறந்து விடலாம்.
SBI முக்கிய செய்தி: சில நிமிடங்களிலேயே மொபைல் மூலமே கணக்கை திறக்கலாம் title=

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங் ஆஃப் இந்தியா, அவ்வப்போது மக்களுக்கு பலவித புதிய நன்மைகளை அளித்து வருகிறது. புதிதாக வங்கி கணக்கு திறக்கவுள்ள வாடிக்கையாளர்களுக்கும் பல வித சலுகைகளையும் வசதிகளையும் வங்கி அளிக்கின்றது. 

அந்த வகையில், நீங்கள் இப்போது SBI-யில் கணக்கை திறக்க விரும்பினால், மொபைல் மூலம் எளிதாக ஒரு கணக்கைத் திறந்து விடலாம். வங்கிக் கணக்கைத் திறக்க வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டிலேயே இருந்தபடி நீங்கள் உங்கள் கணக்கைத் திறந்து விடலாம். இதனுடன், ஆன்லைனில் ஜீரோ பாலன்சில் கணக்கைத் திறப்பதற்கான வசதியையும் பெறுவீர்கள். இந்த வசதிகளை பயன்படுத்தி, எஸ்பிஐ வங்கியில் உங்கள் கணக்கை எவ்வாறு திறப்பது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மொபைல் மூலம் கணக்கைத் திறப்பதன் (Account Opening) மூலம், நீங்கள் உடனடியாக கணக்கு எண்ணைப் (Account Number) பெறுவது மட்டுமல்லாமல், நெட் பேங்கிங் போன்ற வசதிகளையும் உடனடியாகப் பெறுவீர்கள். கணக்கு திறக்கப்பட்டதும், அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு அதிலிருந்து பரிவர்த்தனைகளை செய்யலாம். கணக்கை திறந்த ஒரு சில நிமிடங்களில் நீங்கள் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படுவீர்கள். கணக்கைத் திறப்பதற்கான முழுமையான செயல்முறையை இங்கே காணலாம்.

மொபைல் மூலம் வங்கிக் கணக்கு திறக்கும் செயல்முறை?

(1) முதலில் நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் யோனோ எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலி மூலம் சில நிமிடங்களில் உங்கள் கணக்கைத் திறக்கலாம். நீங்கள் ஏற்கனவே எஸ்பிஐயில் கணக்கு வைத்திருந்தால், நீங்கள் இந்த செயலி மூலம் பல வகையான பரிவர்த்தனைகளை செய்யலாம். உங்களிடம் கணக்கு இல்லையென்றால் இதன் மூலம் உடனையாக ஒரு கணக்கையும் திறக்கலாம்.

ALSO READ: SBI புதிய விதி: குறைந்தபட்ச இருப்பு குறித்து வங்கி அளித்த புதிய தகவல்

(2) உங்களிடம் கணக்கு இல்லையென்றால், செயலியைத் திறந்து, முகப்பு பக்கத்தில் காணப்படும் ‘New To SBI’-ல் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு நீங்கள் வீட்டுக் கடன் மற்றும் கணக்கை திறப்பதற்கான ஆப்ஷன்களை நீங்கள் காண்பீர்கள். இதில் நீங்கள் ‘open account'-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.

(3) இதற்குப் பிறகு நீங்கள் எந்த வகையான கணக்கைத் திறக்க விரும்புகிறீர்கள் என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும், அதில் டிஜிட்டல் சேமிப்பு கணக்கு, இன்ஸ்டா சேமிப்பு கணக்கு போன்றவை இருக்கும். கணக்குத் தகவல் ஒவ்வொரு கணக்கு விருப்பத்திற்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அதன் நன்மைகளும் வழங்கப்படுகின்றன.

(4) உங்கள் தேவைக்கேற்ப கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி கோரப்பட்ட தகவல்களை நிரப்ப வேண்டும். இதில் உங்கள் தகவல்களை நிரப்பவும். புகைப்படம் மற்றும் ஆவண பதிவேற்றம் செய்யும் இடத்தில் ஆவணத்தை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பதிவேற்றம் செய்யவும். இதில் நீங்கள் உங்கள் வீட்டு கிளையையும் (home branch) தேர்ந்தெடுக்க வேண்டும்.

(5) அதிகாரப்பூர்வ வலைத்தளத்துக்கு சென்று நீங்கள் இதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இந்த வலைத்தளத்தைத் திறக்க, புதிய பயனர் விருப்பத்தைக் கிளிக் செய்து கோரப்பட்ட தகவலை நிரப்பவும். அதன் பிறகு நீங்கள் பதிவு செய்து உள்நுழையலாம். இதன் மூலம் உங்கள் இணைய வங்கி வசதியும் செயல்படுத்தப்படும்.

ALSO READ: ATM கொள்ளையர்களின் தலைவன் ஹரியானாவில் அதிரடி கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News