சதம் அடிக்க தயாராகும் தக்காளி... 17 மாநிலங்களில் விலை நிலவரம் இது தான்..!!

நாட்டில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் தக்காளி விலை கிலோ 50 ரூபாயை தாண்டியுள்ளது. சில மாநிலங்களில் தக்காளி கிலோ 70 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 21, 2024, 06:13 PM IST
  • நாட்டின் 17 மாநிலங்களில் தக்காளி விலை ரூ.50க்கு மேல் சென்றுள்ளது.
  • வரும் நாட்களில், தக்காளி விலை 100 ரூபாயைத் தாண்டும்.
  • அந்தமான் நிக்கோபாரில் தக்காளி விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது.
சதம் அடிக்க தயாராகும் தக்காளி... 17 மாநிலங்களில் விலை நிலவரம் இது தான்..!! title=

நாட்டில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நாட்டின் 17 மாநிலங்களில் தக்காளி விலை ரூ.50க்கு மேல் சென்றுள்ளது. 9 மாநிலங்களில் தக்காளி விலை கிலோ ரூ.60க்கு மேல் உள்ளது. அதேசமயம் 4 மாநிலங்களில் தக்காளி விலை ரூ.70க்கு மேல் உள்ளது. ஒரே ஒரு மாநிலத்தில்தான் தக்காளி விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. வெப்பச் சலனம் மற்றும் தக்காளி உற்பத்தி குறைவதால், வரும் நாட்களில், தக்காளி விலை 100 ரூபாயைத் தாண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

நாட்டின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபாரில் தக்காளி விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், ஜூன் 20 அன்று இங்கு தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100.33 ஆக இருந்தது. அதன் பின், கேரளாவில் தக்காளி விலை, கிலோ 82 ரூபாயாக இருந்தது. மிசோரம் மற்றும் தமிழகத்தில் தக்காளி விலை கிலோ ரூ.70ஐ தாண்டியுள்ளது. 

தெலங்கானா, கோவா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தக்காளி கிலோ ரூ.60க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, சிக்கிம், ஒடிசா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, மேகாலயா, திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தக்காளி விலை கிலோ ரூ.50க்கு மேல் எட்டியுள்ளது.

நாட்டின் 17 மாநிலங்களில் தக்காளி விலை நிலவரம் (கிலோ ஒன்றுக்கு)

அந்தமான் நிக்கோபார் -  ரூ.100.33
கேரளா -  ரூ. 82
மிசோரம்  -  ரூ.  77.36
தமிழ்நாடு  -  ரூ. 73.26
தெலுங்கானா  -  ரூ.  64.8
கோவா  -  ரூ. 64
நாகாலாந்து  -  ரூ. 62.81
அருணாச்சல பிரதேசம் -  ரூ.  62.5
மகாராஷ்டிரா -  ரூ.  61.53
ஆந்திரப் பிரதேசம் -  ரூ.  55.6
கர்நாடகா  -  ரூ. 55.53
சிக்கிம் -  ரூ.  55.4
ஒடிசா  -  ரூ. 50.68
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி  -  ரூ. 50.67
மேகாலயா  -  ரூ. 51.5
திரிபுரா  -  ரூ. 51.5
மேற்கு வங்காளம்  -  ரூ. 50.26

ஆதாரம்: மேலே குறிப்பிட்டுள்ள தரவுகள் நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளவை

மேலும் படிக்க | இன்றைய வானிலை..தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தக்காளியின் சராசரி விலை மிகவும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதத்தில் தக்காளியின் சராசரி விலை கிலோவுக்கு ரூ.12.46 அதிகரித்துள்ளது. மே 31ஆம் தேதி தக்காளியின் சராசரி விலை கிலோ ரூ.34.15 ஆக இருந்தது. ஜூன் 20-ம் தேதி நாட்டின் சராசரி தக்காளி விலை கிலோவுக்கு ரூ.46.61 என்ற அளவை எட்டியுள்ளது. 

தற்போது தக்காளியின் பணவீக்கம் தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. டெல்லியில் தக்காளியின் விலை ரூ.33 ஆக உள்ளது. ஜூன் மாதத்தில், டெல்லியில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.28 என்ற அளவில் இருந்தது.

மேலும் படிக்க | பிரபல சைவ உணவகத்தில் சாம்பாரில் கரப்பான் பூச்சி... அதிர்ச்சி அடைந்த பொது மக்கள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News