EPFO கணக்கு இருக்கா? கணக்கில் உள்ள தொகையை எடுக்க எந்த படிவம் தேவை? விவரம் இதோ

EPFO Update: பணியாளர்கள் பங்களிக்கும் தொகை முழுவதும் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் அதே வேளையில், நிறுவனத்தின் பங்களிப்பில் ஒரு பகுதி இபிஎஃப் கணக்கிலும் (EPF Account), மற்றொரு பகுதி ஊழியர் வருங்கால வைப்பு அமைப்பிலும் (EPS) செல்கிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 26, 2024, 09:14 AM IST
  • பொதுவாக பணி ஓய்வுக்கு பிறகு பணியாளர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் சேர்ந்துள்ள தொகையை எடுக்கிறார்கள்.
  • எனினும், சில குறிப்பிட்ட சந்தர்ப்ப்பங்களில் ஓய்வுக்கு முன்னரும் இந்த தொகையில் ஒரு பகுதியை ஊழியர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
  • மேலும், 2 மாதங்களுக்கு தொடர்ச்சியாக வேலை இல்லாமல் இருந்தால், இபிஎஃப் -இன் மொத்த தொகையையும் எடுக்க முடியும்.
EPFO கணக்கு இருக்கா? கணக்கில் உள்ள தொகையை எடுக்க எந்த படிவம் தேவை? விவரம் இதோ title=

EPFO Update: அலுவலக பணிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியை பணியாளர் வைப்பு நிதியில் பங்களிக்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் பணியாளர்களின் கணக்கில் மாதா மாதம் டெபாசிட செய்கின்றது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஊழியர்களின் இபிஎஃப் கணக்குகளை நிர்வகிக்கின்றது. பணியாளர்கள் பங்களிக்கும் தொகை முழுவதும் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் அதே வேளையில், நிறுவனத்தின் பங்களிப்பில் ஒரு பகுதி இபிஎஃப் கணக்கிலும் (EPF Account), மற்றொரு பகுதி ஊழியர் வருங்கால வைப்பு அமைப்பிலும் (EPS) செல்கிறது. 

பொதுவாக பணி ஓய்வுக்கு பிறகு பணியாளர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் சேர்ந்துள்ள தொகையை எடுக்கிறார்கள். எனினும், சில குறிப்பிட்ட சந்தர்ப்ப்பங்களில் ஓய்வுக்கு முன்னரும் இந்த தொகையில் ஒரு பகுதியை ஊழியர்கள் எடுத்துக்கொள்ளலாம். மேலும், 2 மாதங்களுக்கு தொடர்ச்சியாக வேலை இல்லாமல் இருந்தால், இபிஎஃப் -இன் மொத்த தொகையையும் எடுக்க முடியும். 

இபிஎஸ் கணக்கு (EPS Account)

- இபிஎஸ் -இல் டெபாசிட் செய்யப்படும் தொகை குறித்தும் சில விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு EPS கணக்கில் பணியாளரின் பங்களிப்பு இருந்தால், அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு EPFO-ல் இருந்து ஓய்வூதியம் பெற உரிமை பெறுவார்கள்.

- ஆனால் பணியாளர்களின் பங்களிப்பு 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், அவர்கள் முழு தொகையையும் ஒரே நேரத்தில் பெற்றுக்க்கொள்ளலாம். 

- இபிஎஸ் நிதியிலிருந்து EPS ஓய்வூதியத்தைப் பெற, படிவம் 10C மற்றும் படிவம் 10D தேவைப்படும். 

இபிஎஃப்ஓ -வின் முக்கிய படிவங்காளான படிவம் 10C மற்றும் படிவம் 10D என்றால் என்ன? இவை எப்போது பயன்படுகின்றன? இவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம். 

EPFO Forms: படிவம் 10C என்றால் என்ன?

- பணியாளரின் பணிக்காலம் 10 ஆண்டுகள் இல்லாமல், அவர்கள் தங்கள் EPF தொகையை முழுமையாக எடுக்க விரும்பினால், அவர்கள் அவ்வாறு செய்ய முடியும் என EPFO விதிகளில் கூறப்பட்டுள்ளது.

- அத்தகைய சூழ்நிலையில், பணியாளர்கள் படிவம் 10C ஐ (Form 10C) நிரப்ப வேண்டும்.

- இது மட்டுமல்லாமல், ஓய்வூதியத் திட்டச் சான்றிதழைப் பெறவும் இந்தப் படிவம் பயன்படுத்தப்படுகிறது.

- இந்த சான்றிதழின் மூலம், பணியாளர்கள் தங்கள் இபிஎஃப் இருப்பை (EPF Balance) ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றலாம்.

மேலும் படிக்க | 84 ரூபாய்க்கு வீடு வாங்குவது எப்படி? குருநாதா இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காது

EPFO Forms: படிவம் 10D என்றால் என்ன?

- ஒரு பணியாளர் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து, EPF ஓய்வூதியக் கணக்கில் பங்களித்திருந்தால், ஓய்வுக்குப் பிறகு EPFO-ல் இருந்து ஓய்வூதியம் பெறலாம்.

- அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதிய பலன்களைப் பெற, பண்ணியாளர்கள் படிவம் 10D ஐ நிரப்ப வேண்டும்.

- இது தவிர, ஒரு பணியாளர் வேறு எந்த சந்தர்ப்பத்திலும் EPFO இலிருந்து ஓய்வூதியம் பெற தகுதியுடையவராக இருந்தால், அவர் படிவம் 10D ஐ (Form 10D) ப்பிக்க வேண்டும்.

EPFO Forms: படிவம் 31 மற்றும் படிவம் 19 ஆகியவற்றின் பயன்கள் என்ன?

- பணியாளர்கள் ஓய்வுக்கு முன்னரே, பணியில் இருக்கும் போது சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பணம் தொடர்பான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தங்கள் பிஎஃப் இருப்பின் ஒரு பகுதியை எடுக்க விரும்பினாலோ அல்லது பிஎஃப் கணக்கில் அட்வான்ஸ் பெற விரும்பினாலோ, பிஎஃப் வித்ட்ராயல் படிவமான படிவம் 31 (Form 31) தேவைப்படும்.

- இது EPF Claim Form 31 என்றும் அழைக்கப்படுகிறது.

- பணியாளரின் தேவைக்கேற்ப தொகையின் அளவு மற்றும் விதிகள் மாறுபடும்.

- மேலும், இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தங்கள் முழு EPF நிதியையும் திரும்பப் பெற வேண்டுமானால், அவர்கள் PF Withdrawal Form 19 -ஐ நிரப்ப வேண்டும். 

- இது EPF Claim Form 19 என்றும் அழைக்கப்படுகின்றது. 

இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) என்ற முழுமையான புரிதலுடன் இருப்பது தேவைய்யற்ற குழப்பங்களை தவிர்க்க உதவும்.---

மேலும் படிக்க | அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களுக்கு இவ்வளவு சம்பளமா!? ஒரு அப்ளிகேஷனை போட்றலாமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News