வாட்ஸ்அப் புதிய தனியுரிமைக் கொள்கை குறித்து பல தரப்பில் இருந்து கேள்விகள் எழுப்பப்பட்டதை தொடர்ந்து, உச்சநீதிமன்றமும் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது
வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் பேஸ்புக் (Facebook) நிறுவனங்களின் புதிய பாதுகாப்புக் கொள்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைகள், பயனர்களின் தனியுரிமை கொள்கை ஆகியவை குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளன.
இது குறித்து பேஸ்புக் (Facebook) மற்றும் வாட்ஸ்அப்பிற்கு உச்ச நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம், புதிய தனியுரிமைக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது
பேஸ்புக் நிறுவத்தினத்தின் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை (Whatsapp New Privacy Policy ) தொடர்பாக அனைத்து தரப்பிலிருந்தும் ஆட்சேபனைகள் எழுப்பப்பட்ட பின்னர், நிறுவனம் அதை அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளது, இதற்கிடையில், உச்ச நீதிமன்றம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பயனர் தனியுரிமைக்கே முக்கியத்துவம்
இந்தியாவின் தலைமை நீதிபதி (CJI), பேஸ்புக் (Facebook) மற்றும் வாட்ஸ்அப் புதிய தனியுரிமைக் கொள்கை குறித்து குறிப்பிடுகையில், பயனரின் தனியுரிமையைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்றார். உச்சநீதிமன்ற நோட்டீஸுக்கு பதிலளிக்கையில், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயனர்களின் எந்த வகையான தரவு பகிரப்படுகின்றன, எந்த வகையான தரவு பகிரப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் தலையில் குட்டு வைத்த நீதிமன்றம்
இந்திய தலைமை நீதிபதி, பேஸ்புக் நிர்வகிக்கும் வாட்ஸ்அப்பிடம், 'நீங்கள் (வாட்ஸ்அப், பேஸ்புக்) 2-3 டிரில்லியன் டாலர் நிறுவனமாக இருக்கும், ஆனால் மக்களின் தனியுரிமை அதைவிட மதிப்புமிக்கது. அதைப் பாதுகாப்பது நமது கடமை. இது குறித்து வாட்ஸ்அப் உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்கையில், ஐரோப்பாவிற்கு தனியுரிமை குறித்து ஒரு சிறப்பு சட்டம் உள்ளது, இந்தியாவுக்கும் இதே போன்ற சட்டம் இருந்தால், அது பின்பற்றப்படும் என்றது. வழக்கின் அடுத்த விசாரணை 4 வாரங்களுக்குப் பிறகு நடைபெறும்
வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை ஜனவரி 5 அன்று அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து வாட்ஸ்அப் பயனர்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை அறிவிக்கப்பட்டதிலிருந்து, ஏராளமான மக்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு மாறி வருகின்றனர். மேலும், வாட்ஸ்அப் புதிய தனியுரிமைக் கொள்கை தொடர்பாக இந்திய குடிமக்களின் தனியுரிமைக்கான உரிமையை மீறியதாக வாட்ஸ்அப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், வாட்ஸ்அப் புதிய தனியுரிமைக் கொள்கையை 20 மே 2021 வரை ஒத்திவைத்துள்ளது.
ALSO READ | WhatsApp புதிய தனியுரிமை கொள்கையை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR