புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. எந்தவொரு அறியப்படாத இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று வங்கி எச்சரித்துள்ளது.
நீங்கள் அறியாத இணைப்புகளை கிளிக் செய்தால் கடினமாக சம்பாதித்து ஈட்டிய பணத்தை இழக்க நேரிடும் என்றும் வங்கி கூறியுள்ளது. இது தவிர, உடனடி கடன்களை வழங்கும் செயலிகளிடம் கவனமாக இருக்குமாறும் வங்கி கூறியுள்ளது.
SBI வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் வங்கியால் வழங்கப்பட்டுள்ளன. எந்தவொரு செயலியிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று வங்கி வாடிக்கையாளர்களிடம் கூறியுள்ளது. அப்படி செய்வது உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடும் என வங்கி எச்சரித்துள்ளது. சில செயலிகள் நிமிடங்களில் கடன்களைக் கொடுப்பதாக ஆசைக்காட்டி, மக்களை தங்கள் வலையில் சிக்க வைக்கின்றன. பின்னர் மிக அதிக கட்டணத்தில் அவர்களுக்கு கடன்களை வழங்குகின்றன. இப்படிப்பட்ட செயலிகள் சுமார் 35 சதவீதத்தில் கூட கடன்களை வழங்குகின்றன.
SBI ட்வீட் செய்தது
தயவுசெய்து அங்கீகரிக்கப்படாத இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று SBI ட்வீட்டில் எழுதியுள்ளது. SBI அல்லது வேறு எந்த வங்கியைப் போலவும் தங்களைக் காட்டிக்கொண்டு ஆள்மாறாட்டம் செய்யும் நிறுவனத்திற்கு உங்கள் விவரங்களை வழங்க வேண்டாம். உங்கள் அனைத்து நிதித் தேவைகளுக்கும் https://bank.sbi ஐப் பார்வையிடவும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
ALSO READ: உங்களிடம் SBI டெபிட் கார்டு இருக்கா?.. அப்போ உடனே இதை செய்யுங்கள்!!
உடனடி கடன்களின் வலையில் சிக்குவதைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகளையும் வங்கி வழங்கியுள்ளது.
-கடன் வாங்குவதற்கு முன், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் முழுமையாக சரிபார்க்கவும்.
-சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்.
-பதிவிறக்குவதற்கு முன், செயலியின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும்.
-உங்கள் அனைத்து நிதித் தேவைகளுக்கும் https://bank.sbi –ஐ அணுகுங்கள் என்று வங்கி கூறியுள்ளது.
அதிக கட்டணம் வசூலிக்கவுப்படுகிறது
செயலிகள் (Apps) மூலம் கடன்களை வழங்குபவர்கள் செயலாக்கத்தின் பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். நிதிக் குறைபாடுகள் காரணமாக லாக்டௌன் காலத்தில் சிலர் கடன் வாங்கினார்கள். ஆனால் கடன் வாங்கிய பெரும்பான்மையான மக்களால் 7 நாட்களுக்குள் அதை திருப்பிச் செலுத்த முடியவில்லை. அதன் பிறகு இவர்களுக்கு அச்சுறுத்தும் அழைப்புகள் வரத் தொடங்கின. எனவே இந்த வகை செயலிகள் மூலம் கடன் வாங்கும்போது கவனமாக இருப்பது மிக அவசியமாகும்.
தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம்
இது தவிர, உங்கள் தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று வங்கி கூறியது. தனிப்பட்ட விவரங்கள் பகிரப்பட்டால், அதை தவறாக பயன்படுத்தி, மோசடி (Fraud) நபர்கள் உங்கள் கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் காலி செய்துவிடக்கூடும். உங்கள் ஏடிஎம் (ATM) பின், அட்டை எண், கணக்கு எண் மற்றும் ஓடிபி ஆகியவற்றை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று வங்கி கூறியுள்ளது.
ALSO READ: SBI-யின் எந்த கார்டில் எவ்வளவு பணம் எடுக்க முடியும்? முழு விவரம் உள்ளே
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR