தற்போதையா காலகட்டத்தில் அராசாங்கத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வது, புதிய வங்கி கணக்குகளை திறப்பது, அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்க்கு என ஆதார் எண் அவசியமாகி விட்டது. பல்வேறு அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசும் தொடர்ந்து அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்க்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. இதனால் அரசு ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை அரசு நீடிக்குமா? என எதிர்பார்த்த நிலையில், அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்க்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் மூன்று மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீடிப்பு!
அதாவது வரும் ஜூன் 30-ம் தேதி வரை கலா அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசத்தையும் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் உத்தரவு பிறப்பித்தது.
Government of India extends the deadline for linking of Aadhaar with welfare schemes to June 30. pic.twitter.com/m1ABM7kvi3
— ANI (@ANI) March 28, 2018