19:43 04-04-2018
ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து பேசி வருகிறார் தமிழக முதல்வர் பழனிச்சாமி. அவருடன் துணை முதல்வர் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் உடன் இருகின்றனர்.
கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆளும் கட்சியான அதிமுகவும் நேற்று 32 மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது.
அ.தி.மு.க-வின் உண்ணாவிரதம் போலியானது -கமல்!
நாளை தமிழகம் தழுவிய பொது வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தபோவதா திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்க்கு பிறகு அறிவிக்கபட்டு உள்ளது.
உரிமை மீட்புப் பயணம்: ஏப்.,5 மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்தம் :திமுக அறிவிப்பு
இந்நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தும் முதல்வர் மற்றும் ஆளுநர் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 7 மணி அளவில் கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநரை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிச்சாமி.
#CauveryIssue: துரோகத்துக்குத் துணைபோன அதிமுக -MK ஸ்டாலின்!
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையில் தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் சந்திக்கவிருப்பது வழக்கமான சந்திப்பாக பார்க்காமல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.