நாம் இறைவழிபாட்டின் போது ஆரத்தி காட்டுவது என்பது இந்து பூஜைகள் மற்றும் சடங்குகளில் இருந்து பிரிக்க முடியாத ஒரு பழக்கம் ஆகும். இந்துக்களிடம் முன்பிருந்தே இந்த ஆரத்தி எடுக்கும் பழக்கம் இருந்து வருகிறது. நாம் முன்னோர்கள் பின்பற்றியதால் என்னவோ காரணமே இல்லாமல் நாமும் அந்த முறையை கடை பிடித்து வருகிறோம்.
ஆரத்தி காட்டுவது என்றால் என்ன..!
இறைவழிபாட்டின் பொது எண்ணெய் விளக்கை ஏற்றி கடவுள் சிலையை பார்த்து சுற்றப்படுவது தான் தீப ஆரத்தி.
இதில், எண்ணெய் விளக்குகளை தவிர சூடம், சங்கு மற்றும் ஊதுபத்தியாலும் கூட கடவுளுக்கு ஆரத்தி காட்டப்படும். ஆரத்தி சில சமயங்களில் தீய கண்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் கூட தனிபட்ட நபருக்கு காட்டப்படும். அப்படி செய்தால் கண் திருஷ்ட்டி கழியும் என்பது ஐதிகம்.
ஆரத்தி எடுக்கும் பழக்கம் எப்போது தோன்றியது..!
இறைவழிபாட்டின் போது ஆரத்தி எடுக்கும் பழக்கம் பழங்கால வேத அக்னி சடங்கில் இருந்து உருவானவையாகும். பெரும்பாலும் கோயில்களில் கடவுள் இருக்கும் கருவறையானது இருட்டாக இருப்பதால், எண்ணெய் விளக்கை ஏற்றி அந்த இடத்தில் ஒளி கொண்டு வருவதற்காக பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆரத்தி எடுக்கும் பழக்கம் வந்துள்ளது என முன்னோர்கள் சிலர் கூறுகின்றனர்.
பக்தர்கள் இறைவனை வழிபட கருவறைக்குள் நுழையும்போது இறைவனின் உருவம் தெளிவாக தெரிவதற்காகவும் அர்ச்சகர்கள் ஆராத்தி காட்டியுள்ளனர்.
ஆரத்தி என்ற வார்த்தையின் அர்த்தம்...!
ஆரத்தி:
> 'ஆ' என்பது முழுமை என அர்த்தம் ஆகும்.
> 'ரதி' என்பது காதல் என அர்த்தம் ஆகும்.
எனவே, ஆரத்தி என்பது கடவுளின் முழுமையான அன்பு என அர்த்தமாகும். அதனால் தான் ஆரத்தி எடுக்கும் போது மிகுந்த பக்தியுடன், பஜனைகள் பாடி, கைகளை தட்டி, ஆராதனைகள் புரிந்து தியானத்தில் ஈடுபடுகின்றனர் பக்தர்கள்.
இறைவழிபாட்டின் போது ஆரத்தி காட்டுவது எதற்கு...!
ஆன்மீக-அறிவியல்: சார்ந்த கண்ணோட்டம் பூஜைகளின் போது ஒவ்வொரு காரியத்தையும் ஆன்மீக அறிவியலின் படி புரிவது மிகவும் அவசியம். நாம் அனைவருக்கும் எல்லா விஷயமும் தெரிந்திருப்பதில்லை.
உதாரணமாக....! கடவுளுக்கு ஆரத்தி காட்டும் போது, ஆரத்தி தட்டை கடவுளின் அனஹட் சக்கரத்தில் அதாவது இறைவனின் இதயம் இருக்கும் பகுதியில் ஆரம்பித்து, அட்ன்ய சக்கர அதாவது இறைவனின் மைய புருவ பகுதி வரை வலமிருந்து சுற்றலாம்.
இல்லையெனில் இறைவனை சுற்றி வந்து ஆரத்தி காண்பிக்கலாம். நம்மில் பலருக்கும் இது போன்ற சரியான முறை தெரியாமல் ஆரத்தி எடுப்பதால் இதுபோன்ற சடங்குகளினால் கிடைக்கும் பலன்கள் நமக்கு கிடைப்பதில்லை..!
இறைவனுக்கு ஆரத்தி காட்டும் முறை....!
ஆரத்தி தட்டு பொதுவாக வெள்ளி, வெண்கலம் அல்லது தாமிர உலோகத்தால் ஆனவை. அதில், பிசைந்த மாவு, மண் அல்லது உலோகத்தால் செய்த விளக்கில் எண்ணெய் அல்லது நெய் நிரப்பப்பட்டு அந்த தட்டின் மீது வைக்கப்படும். ஒன்று அல்லது அதற்கு (ஒற்றை படையில்) மேலான திரியை எண்ணெயில் வைக்க வேண்டும். அதன் பின்னர் ஆரத்தியை எரிய விட வேண்டும். கற்பூரத்தையும் கூட இதற்கு பயன்படுத்தலாம்.
ஆரத்தி தட்டில் மலர்கள், ஊதுபத்தி, அட்சதை அரிசி போன்றவைகளும் வைக்கலாம். சில கோவில்களில் ஆரத்தி தட்டு பயன்படுத்தப்பட மாட்டாது. மாறாக எண்ணெய் விளக்கை கையில் ஏந்தி கடவுளுக்கு ஆரத்தி காட்டுவார்கள் அர்ச்சகர்கள்.
சரியான முறை பணிவு மற்றும் நன்றியை கடவுள்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக தான் தீபங்கள் ஏற்றி ஆரத்தி காட்டுவதன் நோக்கம் ஆகும். ஆரத்தி காண்பிக்கும் போது நன்றியுள்ள பக்தர்கள் கடவுளின் இறை வடிவில் மூழ்கி விடுவார்கள்.
இந்த ஆரத்தி முறையானது ஐந்து பஞ்ச பூதங்களையும் குறிக்கும்: 1. வானம் (ஆகாயம்) 2. காற்று (வாயு) 3. நெருப்பு (அக்னி) 4. தண்ணீர் (ஜலம்) 5. பூமி (ப்ரித்வி) ஐந்து திரிகளைக் கொண்ட ஆரத்தி பஞ்ச முக ஆரத்தி என்றும் அழைக்கப்படும்.
ஆரத்தி கட்டுவதால் ஏற்படும் பயன்....!
பஞ்ச முக ஆரத்தி விளக்கால் ஆரத்தி காட்டப்படும் போது, ஆரத்தி தட்டில் உள்ள விளக்கை கொண்டு கடவுளின் முன்பு முழுமையான வட்ட வடிவில் சுற்ற வேண்டும். இதனால் விளக்கின் சுடரால் உமிழப்படும் வேகமான சத்வா அதிர்வெண்களால் வேகமான வட்ட இயக்கம் உருவாகும். இந்த சத்வா அதிர்வெண்கள் மெல்ல ராஜஸ் அதிர்வெண்களாக மாறும்.
ஆரத்தி காட்டும் பக்தரின் ஆன்மாவைச் சுற்றி இந்த அதிர்வெண்களின் பாதுகாப்பு கவசமாக உருவாகும். இதனை தரங் கவசம் என அழைப்பார்கள். ஆரத்தி காட்டுபவரின் ஆன்மீக உணர்ச்சி அதிகமாக அதிகமாக, இந்த கவசமும் அதற்கேற்ப நீடித்து இருக்கும்.
ஆரத்தியின் மீது கவனத்தை ஒரு முகப்படுத்தும் போது, இந்த அதிர்வெண்கள் அதிகரித்து கொண்டே போகும்.