பக்தனுக்காக அமாவாசை தினத்தன்று முழு நிலவை வானில் உதிக்கச் செய்த தெய்வம் திருக்கடையூர் அன்னை அபிராமி. இந்த அற்புதச் சம்பவம் நிகழ்ந்த நாள் தை அமாவாசை.
தை அமாவாசை தினமான இன்று அன்னை அபிராமியை வணங்கி அனைத்து செல்வங்களும் பெற்று நீடூழி வாழ்வோம் என்பது நம்பிக்கை.திருக்கடையூரில் வாழ்ந்து வந்த அபிராமி பட்டர் திருக்கடையூர் அபிராமிவல்லி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் அன்னையே கதி என்று வாழ்ந்து வந்தவர்.
அபிராமிவல்லி மீது கொண்டிருந்த பட்டர் கொண்டிருந்த அபிமானத்தையும் பக்தியையும் உணராத பலர், அவரை பித்தன் என்று நினைத்தனர். தனது பக்தனின் பக்தியை உலகறியச் செய்த அன்னை அபிராமியின் திருவிளையாடல் இது.
Also Read | எந்த ராசிக்காரர் சிவனின் இந்த ரூபத்தை வழிபட்டால் உன்னதமான வாழ்வு வாய்க்கும்?
தஞ்சை பகுதியை ஆண்டு வந்த முதலாம் சரபோஜி மன்னர் தை அமாவாசை தினத்தன்று, திருக்கடையூரில் அருள்பாலித்து வரும் அபிராமிவல்லி உடனுறை ஸ்ரீ அமிர்தகடேஸ்வரரை தரிசனம் செய்ய திருக்கடையூருக்கு வந்தார். மக்கள் அனைவரும், மன்னரை வணங்கி வழிவிட்டு நின்றனர். அன்னை அபிராமியை பார்த்தவாறே, பார்த்த விழி பார்த்தபடி பூத்துக் கிடக்க அபிராமி பட்டர் ஆனந்தத்திலேயே திளைத்திருந்தார்.
இன்றைக்கு என்ன திதி என்று மன்னர் கேட்க, இன்றைக்கு பூரண பவுர்ணமி திதி என்று சொல்லிவிட்டார் அபிராமிபட்டர். பவுர்ணமி என்றால், வானில் நிலவு உதிக்குமோ? என்று கேட்டார். அன்று அமாவாசை என்பதை மறந்த பட்டர், நிச்சயம் வரும் என்று கண் மூடிய நிலையிலேயே கூறிவிட்டார்.
அதைப் பார்த்து கடுஞ்சினம் கொண்ட மன்னர், இன்று இரவு வானில் பூரண நிலவு உதிக்காவிட்டால், நிச்சயம் உனக்கு மரண தண்டனை என கட்டளை இட்டார். சற்று நேரம் கழித்தே நடந்ததை உணர்ந்தார் அபிராமி பட்டர்.
Also Read | அமாவாசையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் என்ன தெரியுமா?
ஏற்கனவே, பித்தன் என மற்றவர்கள் தன்னை எள்ளி நகையாடும் நிலையில் அமாவாசை திதியை, பவுர்ணமி திதி என்று சொன்னதால், அவர்கள் சொன்னது உண்மையாகிவிடுமே என்று கவலைப்பட்ட பட்டர், அபிராமி பட்டர் இந்த தவறிலிருந்து தன்னை அந்த அபிராமிவல்லி தாயார் தான் காத்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
அபிராமிவல்லித் தாயார் சன்னதி முன்பாக ஒரு ஆழமான குழியை வெட்டி, விறகுகளை அடுக்கி தீ மூட்டிய பட்டர், குழிக்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளால் ஆன உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அன்னையே, உன்னையே நினைந்து இருக்கும் என்னை காப்பாற்று, இல்லை எனில் உயிரை மாய்ப்பேன் என்று சபதம் செய்தார்.
அபிராமிவல்லியை நினைத்து, உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் எனத் தொடங்கும் அபிராமி அந்தாதியை பாடத் தொடங்கினார். இந்த பாடல்களின் சிறப்பு என்னவென்றால், முதல் வார்த்தையும், இறுதி வார்த்தையும் ஒன்றாகவே இருக்கும்.
Also Read | மங்களகரமான குத்துவிளக்கின் மகிமைகளும், தத்துவங்களும்...
ஒவ்வொரு அந்தாதி முடிந்ததும், ஒவ்வொரு கயிறாக அறுத்துக்கொண்டே வந்தார். அமாவாசை நாளானதால், இருள் கவியத் தொடங்கியது. ஆனால் அன்னையை பாடத் தொடஞ்கிய பட்டர் பாடிக் கொண்டே இருந்தார். 79ஆவது பாடலை அவர் பாடி முடித்தபோது, அன்னை அபிராமிவல்லி அவருக்கு காட்சி கொடுத்தாள்.
அன்னை அபிராமி, தனது காதில் அணிந்திருந்த கம்மலை கழற்றி வான் வெளியில் வீசி எறிந்தாள். அந்த கம்மல் வானில் சென்று நிலவாய் ஒளிர்ந்தது. பக்தன் வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லை உண்மையே என நிரூபித்த அன்னை, பக்தனின் பாடலால் பரவசம் மிகுந்து, நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு என்றாள்.
அபிராமிவல்லியின் அருள் பெற்ற பட்டர் பரவசப்பட்டு, அதே நிலையிலேயே அபிராமியை தொடர்ந்து அந்தாதி பாடல்களால் பூஜித்தார். அபிராமி பட்டரின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த சரபோஜி மன்னரும், சுப்பிரமணியன் என்ற அந்த அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கேட்டார்.
Also Read | பிள்ளையார் பிடித்து வைப்பதால் கிடைக்கும் அற்புதமான பலன்கள் என்ன தெரியுமா?
அதுமட்டுமல்ல, ஏராளமான பரிசுகளையும் மானியத்தையும் அளித்தார். அபிராமிபட்டர் பாட்டர் பாடிய அபிராமி அந்தாதியில் மொத்தம் 100 பாடல்கள் உள்ளன. பாடல்களில் முதல் பாடல் உதிக்கின்ற என்று வார்த்தையில் தொடங்கி 100ஆவது பாடலின் இறுதி வார்த்தையும் உதிக்கின்றவே என்று முடிவடைகிறது. அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலும் பக்தனின் பக்தியை மட்டுமல்ல, தமிழின் சிறப்பையும் அழகையும் எடுத்துக் காட்டுவதாக இருக்கும்.
அபிராமி அந்தாதி பாடல்கள் உதித்த தை அமாவாசை நாள் முதல் இன்று வரை தை அமாவாசை தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து இன்று வரை தை அமாவாசை தினத்தன்று பக்தர்கள் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடி திருக்கடையூர் அன்னை அபிராமியை போற்றி வணங்கி வருவது வழக்கமாகிவிட்டது.
பிற்காலத்திய பக்தி இலக்கியங்களில் அபிராமி அந்தாதியும் ஒன்று என்றால் அது நிச்சயம் மிகையாகாது. இன்று திருக்கடையூர் அபிராமி அன்னையின் ஆலயத்தில், சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோயில்களில் மட்டுமல்ல, பக்தர்களின் வீடுகளிலும் அபிராமி அந்தாதி ஒலித்துக் கொண்டிருக்கும்.
Also Read | இந்துக்களின் பெரும்பாலான கோவில்கள் சேதமடைந்துள்ளன, Pakistan ஆணையம் சாடல்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR