இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்குகிறது!

இஸ்லாமியர்களின் ஐம்பெரும்கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்குகிறது. இஸ்லாமியர்களுக்கு ஐந்து கடமைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய கடமையான நோன்பு. இது ரமலான் மாதத்தில் துவங்கும். 30 நாட்கள் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

Last Updated : May 17, 2018, 05:23 PM IST
இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்குகிறது! title=
இஸ்லாமியர்களின் ஐம்பெரும்கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்குகிறது. இஸ்லாமியர்களுக்கு ஐந்து கடமைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய கடமையான நோன்பு. இது ரமலான் மாதத்தில் துவங்கும். 30 நாட்கள் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
 
ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து 5 வேளை தொழுகை செய்வார்கள். முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பிருத்தலை பெரிய கடமையாக கருதி அனைவரும் கடைபிடிப்பார்கள்.
 
இஸ்லாமிய மாதங்களில் எட்டாவது மாதமான ரமலான் மாதத்தின் ஓர் இரவில் தான் புனித நூலான குர்ஆன் வசனங்கள் இறக்கப்பட்டதாக நம்பிக்கை உண்டு. ஆகவே அந்த மாதம் நோன்பு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 30 நாட்களும் 5 வேலை தொழுகைத்தவிர சிறப்புத் தொழுகையாக தராவிஹ் தொழப்படும். பின்னர் அதிகாலை சூரியன் உதிக்கும் முன்னே சஹர் என அழைக்கப்படும் உணவை உண்டபின் நோன்பு வைக்க துவங்குவார்கள். பிறகு மாலை 6-30 மணி மஹ்ரிப் தொழுகை வரை தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பிருப்பார்கள். பின்னர் நோன்பை முடித்து உணவருந்துவார்கள். 30 நாட்கள் நோன்பின் முடிவில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.
 
நோன்பு இருக்கும் 27-ம் நாளை லைலத்துல்கத்ரு இரவாகவும், நோன்பின் கடைசி நாளை ரம்ஜான் பண்டிகையாகவும் இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். 
 
Trending News