தேசிய தகுதித் தேர்வான NET கடந்த 10 மாதங்களில்,நான்கு முறை கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. UGC NET டிசம்பர் 2020 மற்றும் ஜூன் 2021 தற்போது ஒரே தேர்வாக நடைபெற உள்ளது. இருப்பினும், தேர்வு நடைபெறும் தேதி உறுதியாக வெளியிடப்படவில்லை.
கொரோனா முதல் அலை முடிந்த பின்னர் மற்ற நுழைவுத் தேர்வுகளுடன் UGC NET தேர்வு தேதிகள் ஒத்து போவதால் தேர்வை நடத்தும் அமைப்பான NTA தேர்வை மாற்றியமைத்தது. பல ஒத்திவைப்புகளுக்குப் பிறகு, தேர்வு அக்டோபர் 17 முதல் 25 வரை நடத்த திட்டமிடப்பட்டு அதுவும் தோல்வியடைந்தது.
இதனால் NET தேர்வுக்காக காத்திருக்கும் பலரும் கவலை அடைந்தனர். மேலும் விண்ணப்பதாரர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் கவலைகளை தெரிவிக்க தொடங்கினர். தேர்வுத் தேதிகளை விரைவில் வெளியிடுமாறு கல்வி அமைச்சரிடமும் கோரிக்கை வைத்தனர். தேர்வுகளுக்கு 10-15 நாட்களுக்கு முன் அனுமதி அட்டைகளை வெளியிடுமாறும் அவர்கள் UGC-யிடம் கூறியுள்ளனர். தேர்வுகளுக்கு முன்பாக தங்களுக்கு 30 நாட்கள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்றும், திடீரென நடத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். நெட் தேர்வு தேதிகளைக் அறிவிக்க கோரி விண்ணப்பதாரர்கள் #ReleaseNETEXAMDATE என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர்.
UGC NET தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று NTA ஒரு அறிவிப்பில் கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக தேர்வு தேதியினை அறிவித்துள்ளது. இந்த தேர்வுகள் முறையே நவம்பர் மாதம் 20,21,22,24,25,26,29,30 வரையிலும்,பின்னர் டிசம்பர் மாதம் 01,03,04,05 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.nta.ac.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
ALSO READ 10 மாதங்களில் 4 முறை ஒத்திவைக்கப்பட்ட NET தேர்வுகள்! எப்போது நடைபெறும்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR