ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ ஆல்கா லம்லா காங்கிரஸ் கட்சியில் இணைவு!

கட்சித் தலைமையுடன் நீண்ட காலமாக கசகசப்பில் இருந்து வந்த டெல்லி பெண் எம்.எல்.ஏ ஆல்கா லம்பா ராஜினாமா செய்வதாக அறிவிப்பு!! 

Last Updated : Sep 7, 2019, 12:38 PM IST
ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ ஆல்கா லம்லா காங்கிரஸ் கட்சியில் இணைவு! title=

கட்சித் தலைமையுடன் நீண்ட காலமாக கசகசப்பில் இருந்து வந்த டெல்லி பெண் எம்.எல்.ஏ ஆல்கா லம்பா ராஜினாமா செய்வதாக அறிவிப்பு!! 

டெல்லி சாந்தினி சவுக் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி பெண் எம்.எல்.ஏ. அல்கா லம்பா அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை சோனியா காந்தியை நேரில் சந்தித்த அவர் முறைப்படி காங்கிரசில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த 2014 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த ஆல்கா லம்பா டெல்லியின் சாந்தினி சவுக் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். ஆம் ஆத்மி கட்சித் தலைமை மற்றும் நிர்வாகிகளுடன் நீண்ட காலமாக மனக்கசப்பில் இருந்து வருகிறார். இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலின் போது கூட அவர் பிரச்சாரங்களுக்கு செல்ல மறுத்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் வாகனத்திற்கு பின்னால் நடந்து வருமாறு கூறியதால் பிரச்சார கூட்டங்களில் ஆல்கா லம்பா கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறாக ஆம் ஆத்மியுடன் விரிசலில் இருந்து வந்த ஆல்கா லம்பா கடந்த வாரம் காங்கிரஸ் இடைக்கால தலைவரான சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேசியதால் ஆல்கா லம்பா விரைவில் காங்கிரஸில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில், ஆல்கா லம்பா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆம் ஆத்மிக்கு பிரியாவிடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். கடந்த 6 ஆண்டு பயனம் பலவற்றை கற்றுக்கொடுத்துள்ளது, அனைத்திற்கு நன்றி" என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், தமது ராஜினாமாவை ஏற்கும்படி ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Trending News