குஜராத்தில் நிலநடுக்கம்! ரிக்டரில் 4.6 ஆக பதிவு!

குஜராத் மாநிலம் ஹான்ஜியாசர் பகுதியில் இன்று அதிகாலை 04:03 மணியளவில் மிதமான நிலநடுக்கம்

Last Updated : Mar 29, 2018, 09:03 AM IST
குஜராத்தில் நிலநடுக்கம்! ரிக்டரில் 4.6 ஆக பதிவு! title=

குஜராத் மாநிலம் ஹான்ஜியாசர் பகுதியில் இன்று அதிகாலை 04:03 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் 4.6 ஆக பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்க்கனே இம்மாதம் குஜராத் மாநிலம் கட்ஜ் பகுதியில், 4.2 ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் அம்மாநிலத்தின் மற்றொரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

2001 ஜனவரி 31ம் தேதி குஜராத் மாநிலம், கட்ஜ் பகுதியில் நேரிட்ட நிலநடுக்கத்தால் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1,67,000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த நிலையில், அடுத்தடுத்த நில அதிர்வுகள் குஜராத் மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளன.

Trending News