காலை எழுந்தவுடன் முதலில் தண்ணி குடிங்க: நம்ப முடியாத நன்மைகள் நடக்கும்

Health Benefits of Drinking Water in Morning: காலையில் முதலில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை தரும் என்று உங்களுக்குத் தெரியுமா? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 22, 2023, 05:29 PM IST
  • சிறுநீரக கல் வராமல் தடுக்கும்.
  • மந்தமான தோலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்.
காலை எழுந்தவுடன் முதலில் தண்ணி குடிங்க: நம்ப முடியாத நன்மைகள் நடக்கும் title=

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: கோடை காலம் வந்துவிட்டது. குளிர் காலத்தில் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பவர்களுக்கும் இப்போது அதிக அளவு தண்ணீர் தேவைப்படும். பெரும்பாலானோர் குளிர்காலத்தில் தண்ணீர் குடிப்பதை குறைத்து விடுவார்கள். இருப்பினும், கோடையில் கடுமையான சூரிய ஒளி மற்றும் வியர்வை காரணமாக, உடலில் இருக்கும் நீரின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக நீரிழப்பு ஏற்படலாம். நீரிழப்பைத் தவிர்க்க, உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் தேவை. தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும், ஆனால் காலையில் முதலில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை தரும் என்று உங்களுக்குத் தெரியுமா? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

காலையில் முதலில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

1. நீரிழப்பு

இரவு முழுவதும் தூங்குவதால், நம் உடல் பல மணி நேரம் தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. கோடை காலத்தில் தூங்கும் போது பலருக்கு வியர்க்கும். இது உடலில் நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும், இது நீரிழப்புக்கு காரணமாகிறது. இதனால் தான் அனைவரும் காலையில் எழுந்தவுடனே தண்ணீர் அருந்த வேண்டும், குறிப்பாக கோடை காலத்தில் கண்டிப்பாக முதல் வேலையாக தண்ணீர் அருந்த வேண்டும்.

2. சிறுநீரக கல் வராமல் தடுக்கும்

காலையில் முதலில் தண்ணீர் குடிப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் குறைகிறது. காலையில் தண்ணீர் குடிப்பது வயிற்று அமிலத்தை அமைதிப்படுத்தவும், கற்கள் உருவாகாமல் தடுக்கவும் உதவுகிறது.

மேலும் படிக்க | ஓவரா எடை ஏறினாலும் ஒய்யாரமா குறைக்கலாம்: இந்த சூப்பர் உணவுகள் கை கொடுக்கும்

3. மந்தமான தோலில் இருந்து நிவாரணம்

உங்கள் சருமம் டல்லாக, அதாவது மிக சோர்வாக இருந்தால், எழுந்தவுடன் முதலில் செய்ய வேண்டியது தண்ணீர் குடிக்க வேண்டியதுதான். ஏனெனில் இது இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. புதிய செல்கள் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை பளபளக்க வைக்கிறது.

4. நோய் எதிர்ப்பு சக்தி

காலையில் தண்ணீர் குடிப்பதால், வயிற்றில் உள்ள நச்சுகள் வெளியேறி, அதனால் நிணநீர் மண்டலம் சமநிலைப்படுத்தப்பட்டு, காலப்போக்கில் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. இந்த பழக்கம் மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படும் பிரச்சனையிலிருந்தும் ஒருவரைக் காப்பாற்றும். 

5. எடை இழப்பு

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால், அது வளர்சிதை மாற்றத்தையும், செரிமானத்தையும் அதிகரித்து, எடையைக் குறைக்க உதவுகிறது. இதற்கு நீங்கள் குறைந்தது இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த செய்திகளை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கொரோனாவில் இருந்து தப்பிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News