இதயத்திற்கு காளானின் நன்மைகள்: காளான் சாப்பிடும் மோகம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதன் வித்தியாசமான ருசி காரணமாகவும், பலர் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், சைவ உணவு உண்பவர்களின் முதல் தேர்வாக இது மாறியுள்ளது. காளான் இன்று பெரும்பாலான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. பீட்சா, சூப் அல்லது காளான்களின் வேறு எந்த உணவாக இருந்தாலும் சரி அது மிகவும் விரும்பி உட்கொள்ளப்படுகின்றது. காளான் இன்று அனைவராலும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதையும், அதை வாங்கும் போது இதை எப்படி சரியாக தேர்வு செய்ய வேண்டும் என்பதையும் இந்த பதிவில் காணலாம்.
இதய நோய்க்கு நல்லது
காளானில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், உடலை சேதப்படுத்தும் தீய அம்சங்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது. இதய நோய், புற்றுநோய் போன்ற கடுமையான பிரச்சனைகளைத் தவிர்க்க இதுவே காரணம்.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது
காளானில் உள்ள பீட்டா குளுக்கன் ஒரு வகை உணவு நார்ச்சத்து ஆகும். இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது
காளான்கள் பொட்டாசியத்தின் நல்ல மூலமாகும். இது உடலில் சோடியத்தின் எதிர்மறை விளைவுகளை குறைக்க உதவுகிறது. இது இரத்த நாளங்களை தளர்த்துகிறது. இதன் காரணமாக இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
காளானில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
சரும பிரச்சனையையும் தீர்க்கும்
காளானில் உள்ள பாலிசாக்கரைடுகள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும். கூடுதலாக, இது சருமத்தை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
காளானை சரியாக தேர்ந்தெடுப்பது எப்படி?
- புதிய காளான்களைப் பயன்படுத்துங்கள்
- மேற்பரப்பு மென்மையாக இருக்க வேண்டும்.
- மேற்பரப்பு உலர்ந்திருக்க வேண்டும்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உங்கள் எலும்புகளில் வலுவில்லையா? காரணம் இதுதான், இப்படி சரி செய்யுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ