மாதுளம் பழத்தோலின் நன்மைகள்: காய்கறிகள் மற்றும் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது மிகப்பெரிய உண்மை. ஆனால் அவற்றின் தோல்கள் மற்றும் சில உண்ண முடியாத பாகங்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு சத்துக்கள் அவற்றில் உள்ளன. ஆனால், இவற்றை பற்றிய புரிதல் இல்லாததால், இவற்றை நாம் குப்பையில் வீசுகிறோம். ஆனால் அது எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது என்பதை அறிந்தால் நாம் அப்படி செய்ய மாட்டோம்.
தொண்டை புண், இருமல், வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் மாதுளை தோல் தூள் நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பழத்தில் இருப்பதை விட தோல்களில் அதிக ஆண்டி-ஆக்சிடெண்டுகள் உள்ளதாக கூறப்படுகின்றது. மாதுளை தோலை பொடி செய்து உபயோகித்தால் எளிதாக பயன்படுத்தலாம்.
மாதுளை தோலை பொடி செய்வது எப்படி?
- ஒரு பாத்திரத்தில், மாதுளை முத்துகளுடன் தோலையும் வைக்கவும்.
- அவற்றை 350 டிகிரியில் 20 நிமிடங்கள் அடுப்பில் சுட வேண்டும்.
- தோலை உலர்த்திய பின் நன்றாக பொடி செய்து கொள்ளவும்
- இதை தேவையானபோது பயன்படுத்துக்கொள்ளலாம்.
இந்த பொடியை எப்படி பயன்படுத்துவது?
மாதுளை தேநீர் தயாரிக்கும்போது இந்த பொடியை பயன்படுத்தலாம். ஒரு காலி டீ பேக்கை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் மாதுளை தோலை போடவும். இதை ஒரு கிளாஸ் வெந்நீரில் போட்டு மாதுளை டீ அருந்தலாம். இது தொண்டை புண், இருமல் மற்றும் வயிற்று பிரச்சனைகளுக்கு நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | கர்ப்பிணி பெண்கள் 'இந்த' உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்!
மாதுளை தோல் பொடியை சருமத்திற்கு எப்படி பயன்படுத்துவது?
மாதுளம் பழத்தோல் தூள் சருமத்தில் அதிசயமான விளைவுகளை ஏற்படுத்தும். எலுமிச்சை சாற்றை பொடியுடன் கலந்து பேஸ்ட் போல் செய்துகொள்ளவும். அதை உங்கள் முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் விட்டு, பின்னர் நீரில் கழுவவும்.
இந்த தூள் பருக்களை அகற்றவும், முகப்பரு மற்றும் சுருக்கங்களை குறைக்கவும், கொலாஜனை அதிகரிக்கவும் உதவுகிறது. இது இயற்கையான வழியில், தோலில் காணப்படும் மூப்பின் அடையாளங்கள் மற்றும் சுருக்கங்களை தடுக்கிறது.
மாதுளை தோல் பற்றி நிபுணர்கள் கூறுவது என்ன?
- மாதுளை தோலில் சரும செல்களை மீளுருவாக்கம் செய்து தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும் பண்புகள் உள்ளன.
- உங்களுக்கு எண்ணெய் பசையான அல்லது வறண்ட சருமம் இருந்தால், இந்த அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் மாதுளம் பழத்தோல் மருந்தாகும்.
- மாதுளை தோல் ஒரு சக்தி வாய்ந்த நச்சு நீக்கியாகும். இது தோலில் உள்ள நச்சுகளை சுத்தப்படுத்துகிறது.
- இது மேல்தோலைப் பாதுகாக்கிறது மற்றும் மென்மையான, ஆரோக்கியமான சருமத்தை உங்களுக்கு வழங்குகிறது. ஆகையால் புதிய தோல் செல்கள் எளிதில் உருவாகின்றன.
- மாதுளை தோல்கள் உங்கள் சருமத்தின் pH ஐ சமநிலைப்படுத்தவும், ஈரப்பதமூட்டவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
உடல் ஆரோக்கியத்தில் மாதுளை தோலின் நன்மைகள்:
வயிற்றுப்போக்கு மற்றும் பிற செரிமான பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாக விளங்குகிறது. வைட்டமின் சி நிறைந்த மாதுளை தோல், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும், சேதமடைந்த சரும செல்களை சரிசெய்யவும் சிறந்த வழிகளில் பயன்படுகிறது. விலை உயர்ந்த வைட்டமின் சப்ளிமென்ட்களுக்குப் பதிலாக பாதுளை தோலை பயன்படுத்தலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கின்றது.
மேலும் படிக்க | எச்சரிக்கை! ‘இந்த’ அறிகுறிகள் கல்லீரல் பாதிப்பின் எச்சரிக்கை மணிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ