இந்தியாவில் பாரம்பரிய உணவாக பயன்படுத்தப்படும் ராகி என்னும் கேழ்வரகு சிறுதானியங்களில் தனிச்சிறப்பு மிக்கது. ராகி சத்துக்களின் சக்திக் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. இதில் கால்சியம், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. ராகியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. அதிக உயிரியல் மதிப்பு வாய்ந்த புரதத்தின் முக்கியப் பகுதியான எலோசினின் ராகியில் உள்ளது. சைவ உணவு உண்பவர்கள் உணவில் அதிக புரதத்தை சேர்க்க ராகி சிறந்த தேர்வாகும்.
நார்ச்சத்து நிறைந்த கேழ்வரகு தானியம் எடையைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து இருப்பதால், ராகி பசியைக் கட்டுப்படுத்தி, அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது. நீண்ட நேரம் பசிக்காமல் இருப்பது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. நீங்கள் எந்த நேரத்திலும் இதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் காலை உணவில் உட்கொண்டால், நாள் முழுவதும் ஆற்றல் குறைவில்லாமல் இருக்கும் என்பதோடு, வேறு பல ஆரோக்கிய நன்மைகளையும் (Health Tips) அள்ளி வழங்குகிறது. இதன் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
கேழ்வரகு என்னும் ராகியின் பிற ஆரோக்கிய நன்மைகள்
எலும்புகளை வலுப்படுத்தும் ராகி
மற்ற தானிய மாவுடன் ஒப்பிடும்போது, ராகி மாவில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது. இதனுடன், கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுப்பதற்கும் இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ராகி
நீரிழிவு நோயாகளுக்கு ராகி உணவுகள் சிறந்த தேர்வாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க, ராகி மாவை தினமும் சாப்பிடுங்கள். ராகியில் அதிக பாலிபினால்கள் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். காலை உணவு முதல் இரவு உணவு வரை ராகியை சாப்பிடுவது நன்மை பயக்கும்.
மன அழுத்தத்தை போக்கும் ராகி
இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு பொதுவான அங்கமாகி விட்டது. ராகியில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. கவலை, மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மைக்கு ராகி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | கொழுப்பை எரிக்க உதவும்... புரதம் நிறைந்த சில சூப்பர் உணவுகள்!
இரத்த சோகையை போக்கும் ராகி
ராகியில் இரத்த சோகையை போக்கும். ஏனெனில் அதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. உடலில் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் ராகியை சாப்பிடுங்கள். ராகியை முளைத்து சாப்பிட்டு வந்தால் வைட்டமின் சி அளவு அதிகரிக்கும். இதில் உள்ள இரும்புச்சத்து உடலில் எளிதில் ஜீரணமாகி ரத்தத்தில் எளிதில் கரையும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | குழந்தை பெற முயற்சிக்கும் ஆண்கள் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ