Amla Juice Benefits: நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்

Amla Juice Benefits: நெல்லிக்காய் ஜூஸில் ஒன்றல்ல பல பெரிய நன்மைகள் உள்ளன. இதயத்தைப் பாதுகாப்பதில் இருந்து கல்லீரலைப் பிட்டாக வைத்திருப்பது வரையிலும் இந்த ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 5, 2022, 03:09 PM IST
  • இரத்த பற்றாக்குறை இருக்காது
  • உடல் எடையும் குறைக்க உதவும்
  • நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்
Amla Juice Benefits: நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள் title=

நெல்லிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் நல்ல அளவு விட்டமின்-சி இருப்பதால் எந்த நோயும் வராது. அதனால்தான், இதன் சாற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாகும். வயிறு மற்றும் கல்லீரலை ஆரோக்கியமாக வைப்பதில் நெல்லிக்காய்க்கு தனிப் பங்கு உண்டு. எனவே இதன் சாற்றில் இருந்து நீங்கள் பெறும் மற்ற நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

இரத்த பற்றாக்குறை இருக்காது
நெல்லிக்காய் சாப்பிட்டால் ரத்தசோகை நீங்கும். நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நெல்லிக்காய் போன்ற ஒரு சூப்பர்ஃபுட், ஆரோக்கியத்திற்கு அதீத நன்மைகளை தருவதாக கருதப்படுகிறது. எனவே நெல்லிக்காய் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதன் மூலம் அற்புதமான பலன்களைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | கருத்தரிப்பு பிரச்சனைக்கு கணவர் காரணமா? மீள்வதற்கான டிப்ஸ்

உடல் எடையும் குறைக்க உதவும்
இதுமட்டுமின்றி, காலை நேரத்தில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸைக் குடித்தால் உங்களின் உடல் ஆரோக்கியமாகவும், மெலிதாகவும் இருக்கும். அதேபோல் இதனால் உடல் எடையும் ஈஸியாக குறைகிறது. எனவே உங்கள் அதிகரித்த எடையைக் குறைக்க விரும்பினால், காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடிக்கலாம். இதனால் விரைவான எடை குறையும் என்றே கூறலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்
இது தவிர, கொரோனா காலத்தில் நீங்கள் அதன் சாற்றை உட்கொண்டால் என்னெற்ற நன்மைகளை பெறலாம். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் மற்றும் பல நோய்களுக்கு ஆளாகாமல் உடலைப் பாதுகாக்க வலுவான நோய் எதிர்ப்பு சக்தி உதவுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அத்தகைய சூழ்நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த, நீங்கள் நெல்லிக்காய் சாற்றை உட்கொள்ள வேண்டும்.

நெல்லிக்காய் ஜூஸ் செய்வது எப்படி
நெல்லி காய் உள் இருக்கும் விதை நீக்கி சிறு துண்டுகளாக்கி , சிறிது சீரகம்,, சிறிது கருவேப்பிலை , உப்பு சுவைக்கு இதனுடன் மோர் சேர்த்து அரைத்து வடிகட்டி குடிக்கவும்,, விட்டமின் சி சத்து அதிகம், கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்

நெல்லிக்காய் ஜூஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்
- 10 நெல்லிக்காய்கள்
- 4 முதல் 5 தேக்கரண்டி சர்க்கரை
- கால் தேக்கரண்டி அயோடின் உப்பு
- கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- ஒரு சில ஐஸ் கட்டிகள்

நெல்லிக்காய் ஜூஸ் செய்வது எப்படி
நெல்லிக்காயை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி அனைத்து விதைகளையும் நீக்கவும். இப்போது இந்த துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பேஸ்ட் தயாரானதும், அதில் சர்க்கரை, உப்பு, தண்ணீர் மற்றும் ஏலக்காய் தூள் கலக்கவும். இப்போது அதை ஒரு கிளாஸில் பரிமாறவும், அதன் மேல் ஐஸ் கட்டிகளை வைக்கவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News