ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை நோய் எதிர்ப்பு சக்தி ஆகும். ஆனால், மாறிவரும் வாழ்க்கை முறை, மற்றும் விருப்பத்திற்காகவும், ருசிக்காகவும் மட்டுமே உண்பது என்பது அதிகமாகி வருவதால் பல நோய்கள் மக்களை தங்கள் பிடியில் பிடித்துக் கொள்கின்றன. அதிலும், மழைக்காலத்தில் பல வகையான நோய்கள் ஏற்பட உணவுப் பழக்க வழக்கமே காரணமாகிறது.
நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், சில சமயங்களில் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் பொருட்களை உட்கொள்கிறோம். அவை, நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, நம்மை விரைவில் நோய்க்கு நண்பராக மாற்றிவிடுகின்றன.
எனவே, நமது தினசரி உணவில் முடிந்த அளவு தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் இவை. இவற்றை முற்றிலுமே தவிர்க்க முடியாவிட்டாலும், இன்று முதல் அவற்றை உண்ணும்போது, ஒன்றுக்கு இரு முறை யோசித்து உண்ணுங்கள்.
மேலும் படிக்க | High BP பிரச்சனை உங்களை தொந்தரவு செய்கிறதா? அப்போ பச்சை மிளகாய் தான் தீர்வு
நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் உணவுகள்
சர்க்கரை
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த விரும்பினால், சர்க்கரையால் செய்யப்பட்ட பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதில் ஐஸ்கிரீம், கேக், மிட்டாய், சாக்லேட், குளிர்பானங்கள் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இவற்றை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. எனவே, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டுமெனில், இனிப்பான பொருட்களிலிருந்து விலகி இருங்கள்.
உப்பு பொருட்கள்
பொட்டலத்தில் அடைக்கப்பட்ட பொருட்களை சாப்பிடுவதை பலர் விரும்புவார்கள். அதிலும், சிப்ஸ், காரசாரமான பேக்கிங் ஸ்நாக்ஸ் என்பவை நமக்கு விருப்பமானவை. ஆனால் இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்., மறுபுறம், நீங்கள் அதிக காரம் உட்கொண்டால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. ஆட்டோ இம்யூன் நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
கொழுப்பு அமிலம்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நமது உடலுக்கு தேவையானவை என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால், ஒமேகா 6 கொழுப்பு அமிலம் உடலின் தேவைக்கு அதிகமாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். எனவே, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக வைக்க வேண்டும் என்றால், ஒமேகா -6 கொண்ட பொருட்களை அளவுக்கு அதிகமாக உண்ணக்கூடாது.
மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருக்கிறதா? சர்க்கரை நோய் தொடக்கத்துக்கான அலாரமாக இருக்கலாம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சைப்பழம் ஆகியவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
பாதாம்
பாதாம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகும். இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க பாதாம் உதவுகிறது. நோயெதிர்ப்பு அமைப்புக்கும் நல்லது. வைட்டமின் ஈ, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக உள்ளது பாதாம் .
மஞ்சள்
மஞ்சள் ஒரு அற்புதமான மசாலா ஆகும், மஞ்சளின் முக்கிய அங்கமான குர்குமின், நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிறைந்துள்ளது. எனவே, அன்றாட உணவில் நோயெதிர்ப்பு அமைப்பை குலைக்கும் பொருட்களை குறைத்து, இம்யூனிடியை அதிகரிக்கும் பொருட்களை அதிகரிக்கச் செய்தால், ஆரோக்கியமான உடல் உங்களுக்கு சொந்தமாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கொழுப்பை எரிக்க உதவும் பொட்டாசியம் நிறைந்த ‘சில’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ