வியர்வையால் உடல் துர்நாற்ற பிரச்சனையா: எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ

Body Odour: கோடையில் வியர்வையால் துர்நாற்ற பிரச்சனைகள் ஏற்படுபவர்கள் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் நிவாரணம் பெறலாம். அவற்றப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 7, 2022, 06:33 PM IST
  • கோடைக்கால தோல் பராமரிப்பு குறிப்புகள்.
  • வியர்வையால் துர்நாற்ற பிரச்சனை ஏற்படுவதுண்டு.
  • இதை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன.

Trending Photos

வியர்வையால் உடல் துர்நாற்ற பிரச்சனையா: எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ  title=

கோடைக்கால தோல் பராமரிப்பு குறிப்புகள்: கோடை காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த பருவத்தில் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது இயல்பான செயல். வியர்வை காரணமாக, உடலில் உள்ள அனைத்து தோல் துளைகளும் தானாகவே சுத்தம் செய்யப்படுகின்றன. ஆனால், சில சமயங்களில் அதிகப்படியான வியர்வை மற்றும் துர்நாற்றம் நமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். கோடைக்கால வியர்வை நமக்கு பல வித தர்மசங்கடங்களை ஏற்படுத்துவதுண்டு. ஆனால், துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா?

கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, உடலில் இருந்து வியர்வை வெளியேறுகிறது என்று சொல்லப்படுகிறது. இதனால் உடல் வெப்பநிலை குறைகிறது. ஆனால், வியர்வையால் உடலில் ஈரப்பதம் வரும். இந்த ஈரப்பதத்தில் பாக்டீரியாக்கள் வளர ஆரம்பிக்கின்றன. பாக்டீரியாவால், உடல் துர்நாற்றம் ஏற்பட ஆரம்பிக்கிறது. 

கோடையில் வியர்வையால் துர்நாற்ற பிரச்சனைகள் ஏற்படுபவர்கள் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் நிவாரணம் பெறலாம். அவற்றப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1. உருளைக்கிழங்கின் உதவியுடன் துர்நாற்றத்தை அகற்றலாம்

உருளைக்கிழங்கு உடலின் இயற்கையான சுத்தப்படுத்தியாக கருதப்படுகிறது. இது சருமத்தில் உள்ள அனைத்து அழுக்குகளையும் நீக்குகிறது. இது உடல் துர்நாற்றத்தை போக்குகிறது. ஒவ்வொரு நாளும் குளிக்கும் போது, ​​அதிகமாக வியர்க்கும் உடலின் பாகங்களில் பச்சை உருளைக்கிழங்கு துண்டுகளை தேய்க்கலாம். 

இதனால் வியர்வை மற்றும் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். இது தவிர புதினா இலை மற்றும் படிகாரம் ஆகியவற்றை குளிக்கும் நீரில் சேர்த்து குளிக்கலாம். இதைச் செய்வதால் உடல் குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

மேலும் படிக்க | Migraine: ஒற்றைத்தலைவலிக்கான காரணங்கள், அறிகுறிகள் இவைதான் 

2. எலுமிச்சையின் உதவியுடன் துர்நாற்றத்தை அகற்றலாம் 

எலுமிச்சை சாறு உடல் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது. இதனுடன், வியர்வை பிரச்சனையை நீக்கவும் இது உதவுகிறது. தினமும் குளிப்பதற்கு முன், தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து குளிக்கவும். இதனால் வியர்வை மற்றும் துர்நாற்றம் பிரச்சனை நீங்கும்.

3. ஐஸ் உதவியுடன் துர்நாற்றத்தை அகற்றலாம்

பனிக்கட்டியின் உதவியுடன், வியர்வை மற்றும் துர்நாற்றம் ஆகியவற்றின் பிரச்சனையை நீக்கலாம். உங்களுக்கு அதிக வியர்வை பிரச்சனை இருந்தால், முதலில் நீங்கள் ஒரு ஐஸ் கட்டியை எடுத்து, உடலில் அதிகமாக வியர்க்கும் பகுதிகளில் தேய்க்கவும். உங்கள் வியர்வை மற்றும் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.

4. வெள்ளரிக்காய் உதவியுடன் துர்நாற்றத்தை அகற்றலாம்

வெள்ளரிக்காயில் உள்ள குணங்கள் வியர்வை பிரச்சனையை நீக்குகின்றன. கோடையில் குளித்த பின் குளிர்ந்த வெள்ளரிக்காயை வியர்வை உள்ள இடங்களில் தேய்க்கவும். இதன் மூலம் வியர்வை பிரச்சனை நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.

5. பிரிஞ்சி இலைகளின் உதவியுடன் துர்நாற்றத்தை அகற்றவும்

கோடையில் உங்களுக்கு அதிக வியர்வை ஏற்பட்டால், அதை அகற்ற பிரிஞ்சி இலைகளை காய வைத்து அரைக்கவும். குளித்த பிறகு, அதை உடலில் தேய்த்துக்கொள்ளவும். இதனால் வியர்வை குறைவதுடன் துர்நாற்றம் பிரச்சனையும் நீங்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய வீட்டு வைத்தியங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News