கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பான ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம். இந்தியாவின், உள்நாட்டில் உருவாக்கப்படும் முதல் கொரோனா தடுப்பூசியான mRNA தொழில் நுட்பத்தை கொண்டு உருவாக்கும் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய மத்திய மருந்து கட்டுபாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட அமைச்சகம், mRNA தடுப்பூசியான HGCO19 என்ற மருந்தை புனேவின் ஜெனோவா உருவாக்கியுள்ளது என்று கூறினார்.
கொரோனா வைரஸில் (Corona Virus) உள்ள மரபு சங்கிலியான RNAக்களில் பல பிரதிகள் இருக்கும். அதில் ஒரு பிரதி
mRNA ஆகும். இதை அடிப்படையாக கொண்டு தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் பைசர் (Pfizer), மாடர்னா நிறுவனங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசியில் mRNA தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி தயாரிப்பில் இதுவரை இல்லாத தொழில்நுட்பம் இதுவாகும். இதில் எளிதாகவும் விரைவாகவும் தடுப்பூசி தயாரிக்கலாம்.
"இந்தியாவின் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் mRNA தடுப்பூசியான HGCO19 என்ற மருந்தை புனேவின் ஜெனோவா (Gennova) உருவாக்கியுள்ளது. இதன் I / II கட்ட மனித மருத்துவ பரிசோதனையைத் தொடங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது. ”என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ALSO READ | வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு தயார்: வேளாண் அமைச்சர்
mRNA தடுப்பூசி, பயோடெக்னாலஜி துறையின் Ind-CEPI திட்டத்தின் கீழ் உதவியை பெற்று வருகிறது
அந்த அறிக்கையில், mRNA தடுப்பூசிகள் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க வழக்கமான மாதிரியைப் பயன்படுத்துவதில்லை என்று அமைச்சகம் கூறியது. அதற்கு பதிலாக, mRNA தடுப்பூசி வைரஸின் செயற்கை RNA மூலம் உடலில் உள்ள புரதத்தை உருவாக்க மூலக்கூறு வழிமுறைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
mRNA அடிப்படையிலான தடுப்பூசிகள் விஞ்ஞான ரீதியாக ஒரு தொற்றுநோயை நிவர்த்தி செய்வதற்கான சிறந்த தேர்வாக இருக்கின்றன. ஏனென்றால் இது விரைவில் உருவாக்கப்படக் கூடியவை.
செல் சைட்டோபிளாசத்திற்குள் உள்ள புரத கட்டமைப்பை அறிந்து கொண்டு செயலாற்ற கூடிய அதன் உள்ளார்ந்த திறன் காரணமாக அவை மிகவும் செயல்திறன் மிக்கதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், mRNA தடுப்பூசிகள் முழுமையாக செயற்கையானது என்பதால், அதன் வளர்ச்சிக்கு ஹோஸ்ட் தேவையில்லை, அதாவது, முட்டை அல்லது பாக்டீரியா போன்ற எதுவும் தேவையில்லை.
அனைத்து ஆரம்ப கட்ட பணிகளையும் முடித்த பின்னர், ஜெனோவா இப்போது DCGI அலுவலகத்தில் ஒப்புதல் பெற்றுள்ளதால் கட்டம் I / II மனித மருத்துவ பரிசோதனையை தொடங்க உள்ளது.
ALSO READ | சீனாவை தடுத்து நிறுத்தும் ஒரு சுவராக இந்தியா இருக்க வேண்டும்: விபின் ராவத்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR