அழகான சருமத்திற்கு மாதுளம் பழத்தோல் செய்யும் அற்புதம்! ஆரோக்கியத்திற்கு மாதுளை தோல்

Benefits of pomegranate peel: மாதுளை தோலில் மிக அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. மாதுளையின் தோலில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 6, 2023, 07:02 AM IST
  • ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மாதுளம்பழத் தோல்
  • ஆண்டி-ஆக்ஸிடெண்ட் நிறைந்த மாதுளையின் தோல்
  • சருமத்தை மென்மையாக்கும் மாதுளை

Trending Photos

அழகான சருமத்திற்கு மாதுளம் பழத்தோல் செய்யும் அற்புதம்! ஆரோக்கியத்திற்கு மாதுளை தோல் title=

மாதுளம்பழத் தோலின் நன்மைகள்: மாதுளை ஒரு சுவையான மற்றும் சத்தான பழம். இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கும் அற்புதமான பழம். அற்புதமான இந்த பழத்தின் முத்துக்கள் மட்டுமா சத்தானது? அதிலுள்ள கொட்டை மற்றும் தோல் பகுதியும் உடலுக்கு மிகவும் நல்லது. பொதுவாக நாம் மாதுளம்பழத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு அதன் தோலை தூக்கிவீசிவிடுகிறோம்.

ஆனால் ஆயுர்வேதம்,  மாதுளை தோல்களை பயன்படுத்தி மருந்து முதல் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம் என்று சொல்கிறது. மாதுளை தோலில் மிக அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. மாதுளையின் தோலில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன:

தோல் நோய்களுக்கு உதவுகிறது
மாதுளை தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் அதிகம் உள்ளது மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனை (தோலில் உள்ள கரும்புள்ளிகள்) குணப்படுத்தும். மாதுளை தோல்கள் புற ஊதா B (UVB) சேதத்திலிருந்து பாதுகாக்கும் மற்றும் வயதான அறிகுறிகளைக் குறைக்கும்.

மேலும் படிக்க | ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த ‘இந்த’ 5 பழங்களை தோலுடன் உண்டால் டயபடீஸ்க்கு குட் பை சொல்லலாம்

நாள்பட்ட நோய்களின் ஆபத்து குறைவு
மாதுளை தோல்கள் இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். மாதுளை தோல் சாறு அதிக எடை மற்றும் பருமனானவர்களுக்கு அழற்சி எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். இதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவு சீராகும்.

செவித்திறன் மேம்படும்
வயது தொடர்பான காது கேளாமை என்ற பிரச்சனைக்கு காரணமான ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை போக்கத் தேவையான  ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மாதுளம்பழத் தோல்களில் அதிகம் இருக்கின்றன. எனவே, மாதுளம்பழத் தோலை பயன்படுத்தினால், செவியின் கேட்கும் திறன் மேம்படும்  

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
அல்சைமர் நோய் உருவாக ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஒரு பங்கு வகிக்கிறது. மாதுளை தோல்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், அல்சைமர் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | இதயத்தின் ரகசியத்தை வெளிப்படுத்தும் கால்கள் & பாதங்கள்! மாரடைப்பை காட்டும் அறிகுறிகள்

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்
மாதுளை தோலில் அதிக அளவு புனிகலஜின் என்ற பாலிபினால் உள்ளது, இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மார்பக, வாய் மற்றும் வயிறு புற்றுநோய் செல்களில் ஆன்டி-ப்ரோலிஃபெரேடிவ் விளைவைக் காட்டியுள்ளது, அதாவது புற்றுநோய் செல்கள் பரவுவதை மந்தமாக்குகிறது. மேலும், கல்லீரலைப் பாதுகாக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதால், மாதுளம்பழத்தோலானது கல்லீரல் புற்றுநோய் பாதித்தவர்களுக்கும் நன்மை பயக்கும்.

பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
மாதுளை தோலைக் கொண்டு பற்களை நன்கு பராமரிக்கலாம். மாதுளை தோலில் இருந்து எடுக்கப்படும் சாறு வலுவான பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண்டுள்ளது பல் மற்றும் ஈறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க, மாதுளையின் தோலில் இருந்து எடுக்கப்படும் சாறு உதவும் என்று  சில ஆய்வுகள் கூறுகின்றன.

மாதுளை தோலை எப்படி பயன்படுத்துவது?

மாதுளை தோல் பொடியை கடையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். வீட்டில் மாதுளை தோலை தூள் செய்வதும் சுலபமானது தான்

மேலும் படிக்க | எச்சரிக்கை! குடலை காலி செய்யும் சில ஆபத்தான உணவுகள்!

வீட்டில் மாதுளம்பழத் தோல் போடி செய்யும் முறை
மாதுளம்பழத்தோல்களை எடுத்து பத்திரப்படுத்தவும்

மாதுளையின் தோல்களை 2-3 நாட்களுக்கு சூரிய ஒளியில் நேரடியாக உலர வைக்கவும்

நீர் முற்றிலுமாக வற்றி நன்கு காயும் வரை வெயிலில் வைத்து காய வைக்கவும்

நன்கு உலர்ந்த பிறகு அரைத்து பத்திரப்படுத்தவும்

காற்று புகாத கொள்கலனில் மாதுளம்பழத் தோலின் பொடியை வைத்து பயன்படுத்தவும்

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பழங்கள் காய்கறி டயட் மூலம் உடல் எடையை குறைப்பவரா? இந்த பிரச்சனைகள் வரலாம்! அலர்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News