Diabetes Control Tips in Tamil: இந்தியாவில் சர்க்கரை நோய் இருப்பவர்கள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இது மெல்லக் கொல்லும் ஒரு சைலண்ட் கில்லர் நோய், இது மெது மெதுவாக உடலை சேதப்படுத்தும். நமது உடல் பாதிக்கப்பட்டதை உணரும் நேரத்தில், நாம் முழுமையாக அதன் பிடியில் சென்று இருப்போம். ஒருமுறை சர்க்கரை நோய் வந்தால், அதனை குணப்படுத்துவது என்பது இயலாது. அதனை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். எனவே, இந்த நோயைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குறிப்பாக யாருக்காவது இந்த நோய் வந்தால், உங்கள் டயட்டில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் டயட்டின் மூலம், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். நீரிழிவு அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உணவு கட்டுப்பாடு மிக அவசியம். பல சமயங்களில் நாம் தெரிந்தோ தெரியாமலோ இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும் பல உணவு பொருட்களை உட்கொண்டு விடுவோம். எனவே, நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், தவறுதலாக கூட சில உணவுகளை உட்கொள்ளக்கூடாது (Diabetes Control Tips). இந்த சர்க்கரை நோய் இருந்தால் நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இங்கு கூறுகிறோம்.
குளிர்பானங்களை தவிர்க்கவும்
செயற்கை பழ ஜூஸ்கள் மற்றும் சோடா வகை குளிர்பானங்களில் நிறைய சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அவை இரத்த சர்க்கரை அளவை பெருமளவு அதிகரிக்கின்றன, எனவே அவற்றை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளக்கூடாது. இதனுடன் சந்தையில் கிடைக்கும் பல வகையான எனர்ஜி ட்ரிங்குகள் என்னும் ஆற்றல் பானங்களையும் உட்கொள்ளக்கூடாது.
மேலும் படிக்க | எகிறும் சுகர் லெவலுக்கு எமனாகும் நாவல் பழம்... பயன்படுத்தும் சரியான முறை..!!
வறுத்த உணவை தவிர்க்கவும்
சர்க்கரை நோயாளிகள் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். நீரிழிவு நோயில், பூரி-பக்கோடா, பிரஞ்சு பிரைஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், சமோசா போன்றவற்றை உட்கொள்ளவதை தவிர்க்க வேண்டும். இந்த விஷயங்கள்உணவுகள் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கின்றன. எனவே உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
தவிர்க்க வேண்டிய பழங்கள்
சர்க்கரை நோய் இருந்தால், எச்சரிக்கையுடன் பழங்களை உட்கொள்ள வேண்டும், ஏனெனில் மாம்பழம், சப்போட்டா, வாழைப்பழம், அத்திப்பழம் போன்ற சில பழங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. எனவே, எந்த ஒரு பழம் அல்லது பழச்சாறு சாப்பிடும் முன், நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | வேகவைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்... வேற லெவலில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ