புதுடெல்லி: தேநீர் அருந்துவது சுறுசுறுப்பைக் கூட்டும், சோர்வைப் போக்கும் என்றாலும், இந்த 5 உணவுகளை தேநீருடன் சாப்பிடாதீர்கள், உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் காம்பினேஷன், தேநீர் குடிக்கும் அனுபவத்தையே கசப்பானதாக்கிவிடலாம்.
மனதை அமைதிப்படுத்தவோ அல்லது ஆற்றலைக் கொண்டுவரவோ குடிக்கும் ஒரு கோப்பை தேநீர் ஆரோக்கியத்திற்கு ஆதரவானதாக இருக்க வேண்டுமானால், சில விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது. அது துளசி டீயாக இருந்தாலும் சரி, க்ரீன் டீயாக இருந்தாலும் சரி, தேநீரை சுவைத்துப் பருகுவதன் அனுபவத்தை வெறும் டீயுடன் அனுபவியுங்கள். எந்தெந்த பொருட்களை தேநீருக்கு பிடிக்காது?
இந்தியாவில் தேநீர் பிரியர்களுக்கு பஞ்சமில்லை. ஒவ்வொரு தெருவிலும், தெரு முனைகளிலும் டீக்கடைகள் காணப்படும். தேநீர் பிரியர்கள் தேநீர் அருந்தி தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நிபுணர்களின் கூற்றுப்படி, தேநீருடன் இந்தப் பொருட்களை சாப்பிடுவது தவறு என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.
ஆனால் கவனக்குறைவாக நாம் தேநீருடன் உண்ணும் சில பொருட்கள் நமக்கு பெரிய அளவிலான ஆபத்தைக் கொடுக்கலாம்.
மேலும் படிக்க | இரவு தூங்கும் முன் இந்த 4 உணவுகளை சாப்பிட்டால் தொப்பை கரையும்
உலர் பழங்கள்
தேநீர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை பாலுடன் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உலர் பழங்களில் இரும்புச்சத்து உள்ளது, எனவே, தேநீருடன் உலர் பழங்களை சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுவதில்லை. எனவே, தேநீருடன் உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகளை சாப்பிட வேண்டாம்.
இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகள்
இரும்பு மற்றும் தேநீர் கலவையானது நல்லதாக கருதப்படுவதில்லை. தேநீரில் டானின்கள் மற்றும் ஆக்சலேட்டுகள் உள்ளன, அவை இரும்புச் சத்து பதப்படுத்தப்படுவதைத் தடுக்கின்றன. எனவே, இரும்புச்சத்து மிகுந்த தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் பச்சை இலைக் காய்கறிகளால் செய்யப்பட்ட உணவுகள் சாப்பிடும்போது தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
எலுமிச்சை மற்றும் தேநீர்
லெமன் டீ உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தேநீரில் எலுமிச்சை சேர்ப்பதால் அது அமிலத்தன்மையை உண்டாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? லெமன் டீ அருந்துவது, உடலில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். வெறும் வயிற்றில் லெமன் டீ குடித்தால், அசிடிட்டி பிரச்சனை வரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தேநீரில் எலுமிச்சை சேர்ப்பதை புறக்கணிக்கவும்.
குளிர் பொருட்களை தவிர்க்கவும்
குளிர்ச்சியான எதையும் தேநீருடன் அல்லது தேநீர் அருந்திய பிறகு உண்பதைத் தவிர்க்க வேண்டும். இது செரிமானத்தை மோசமாக்கும். தேநீர் அருந்துவதற்கும், குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவதற்கும் இடையில் குறைந்தது அரை மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.
மஞ்சள்
மஞ்சள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் மஞ்சள் மற்றும் தேயிலை இரண்டும் இணைந்தால் அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மஞ்சளுடன் தேநீர் இணைந்தால், மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வயிற்றில் வாயு பிரச்சனைகள் ஏற்படலாம்.
தேநீர் பிரியராக இருப்பதில் தவறில்லை. ஆனால், தேநீருடன் இதுபோன்ற பொருட்களை உட்கொள்வதை கவனமாக தவிர்க்கவும். இவை உங்கள் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தொப்பையை குறைக்க இந்த உணவுகளை காலையில் சாப்பிட்டால் போதும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ