Guava Leaf Juice To Control Diabetes: சர்க்கரை நோய் என்பது மிகவும் கொடூரமான நோயாகும். இந்த நோய் ஒருமுறை வந்துவிட்டால் அதை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான செயலாகும். அதேபோல் சரியான நேரத்தில் சர்க்கரை நோய் சரியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், உடலின் அனைத்து உறுப்புகளையும் சேதமடையத் தொடங்கும், மேலும் இது மரணத்தை ஏற்படுத்தக்கூடும். அதேபோல் இது ஒரு பரம்பரை நோய் தவிர, இது ஒரு வாழ்க்கை முறை சார்ந்த நோயும் கூட. எனவே, அதை சரியாகக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
இந்நிலையில் சர்க்கரை நோய் (Diabetes) அவதிப்படுகிறீர்கள் என்றால், இதை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இதற்கு உதவும் சில சிறப்பு வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் கொய்யா மற்றும் அதன் இலை ஆகும். ஆம் இதன் பழம் மற்றும் இலை உங்கள் இரத்த சர்க்கரையை (Blood Sugar) கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
நீரிழிவு நோயில் கொய்யாவின் நன்மைகள் என்னென்ன?
கொய்யா (Guava) மிகவும் அதிகளவு சத்துள்ளகள் நிறைந்துள்ளது. ஆரஞ்சு பழத்தை விட இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அந்த வகையில் கொய்யாவில் வைட்டமின் பி2, ஈ, கே, நார்ச்சத்து, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி இந்த கொய்யா பல நோய்களைத் தடுக்கும். கொய்யா மட்டுமின்றி, கொய்யா இலைகள் மற்றும் கொய்யா தண்டு ஆகியவற்றில் கூட நீரிழிவு நோய் எதிர்ப்பு (Diabetes Control Tips) பண்புகள் உள்ளன.
மேலும் படிக்க | கண்களை பாதிக்கும் புற ஊதாக்கதிர்களில் இருந்து தப்பிக்க 8 வழிகள்..!
கொய்யா இலைகளை எப்படி பயன்படுத்துவது?
கொய்யாவின் மென்மையான இலைகளை (Guava Leaf Benefits) எடுத்து, அவற்றை நசுக்கி, விரும்பினால், அதிலிருந்து சாறு அல்லது கஷாயம் செய்து குடிக்கலாம். இந்த கஷாயத்தில் சிறிது இலவங்கப்பட்டை, வெந்தயம் (Fenugreek Seeds) , ஜாமூன் விதைத் தூள் ஆகியவற்றையும் கலந்தும் அருந்தலாம். இந்த ஆயுர்வேத கஷாயம் (Ayurvedic) சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
கொய்யா சாலட் வடிவில் சாப்பிடலாம்
இதற்கு கொய்யாவை நறுக்கி தினமும் சாப்பிடலாம். இதைத் தவிர, கொய்யாப்பழத்தை அதாவது பச்சையாகப் பழத்தை எடுத்து நசுக்கி 250 மில்லி தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கதலாம். இதுவும் சர்க்கரையை வேகமாக குறைக்க உதவும்.
நீரிழிவு நோயில் கொய்யா ஏன் பயனுள்ளதாக இருக்கிறது?
கொய்யாவில் உணவு நார்ச்சத்து உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. அதனுடன் இது சர்க்கரை அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது. அதேபோல், கொய்யாவில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது. அதாவது சர்க்கரையின் அளவை ஓரளவுக்குத்தான் அதிகரிக்கிறது. இதனால் தான் இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் நல்லது என்று கூறப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தினமும் ஓடினால் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை கட்டுக்குள் வருமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ