பாதங்களில் வெடிப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றுங்கள்:-
வாழைப்பழம்
வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து நீரில் கழுவ குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.
எலுமிச்சை சாறு
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை ஊற்றி பாதங்களை வாரம் ஒருமுறை 10 நிமிடம் ஊற வைத்து வந்தால் பாதங்கள் மென்மையுடன் இருக்கும்.
பப்பாளி
பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் உள்ள வெடிப்பு பகுதியில் தேய்த்து வந்தால் குதிகால் வெடிப்பு மறைந்து விடும்.
மருதாணி இலை
மருதாணி இலைகளை நன்றாக அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
கடுகு எண்ணை
கடுகு எண்ணெயை தினமும் கால் பாதத்தில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.