Virat Kohli, RCB Captain | ஐபிஎல் 2025 தொடரில் மீண்டும் ஆர்சிபி கேப்டனாக களமிறங்குகிறார் விராட் கோலி. 2013 ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி 2021 ஆம் ஆண்டு அப்பதவியில் இருந்து விலகினார். 8 ஆண்டுகளாக அவரது தலைமையில் ஆர்சிபி விளையாடினாலும், ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி வெல்லவில்லை. இதனால் விராட் கோலி கேப்டன்ஷிப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. 2016 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை ஆர்சிபி அணி முன்னேறியிருந்தாலும் நூழிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி, முதன்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இருப்பினும் அடுத்தடுத்த சீசன்களில் பெரும் நம்பிக்கையோடு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கினாலும் அந்த அணிக்கு சாம்பியனாகும் அதிர்ஷ்டம் மட்டும் இதுவரை கிடைக்கவில்லை.
இதனால் ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக மிகப்பெரிய மாற்றத்தை செய்ய தொடங்கிவிட்டது ஆர்சிபி அணி. அந்த அணியின் கேப்டனாக 3 ஆண்டுகள் இருந்த டூபிளசிஸ் 40 வயதை எட்டிவிட்டதால் அவரை அப்பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு புதிய கேப்டன் ஒருவரை நியமிக்கலாம் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் முடிவெடுத்துவிட்டது. இளம் வீரர்களை யாரையாவது கேப்டனாக நியமிக்கலாம் என பரிசீலித்த அந்த அணி இறுதியாக விராட் கோலியை மீண்டும் ஆர்சிபி கேப்டனாக்க முடிவெடுத்துள்ளது. அதாவது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க இருக்கிறார் விராட் கோலி. ஆர்சிபி ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய குட்நியூஸ். ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக அந்த அணி ரசிகர்களுக்கு கொடுத்த தீபாவளி பரிசு என்று கூட சொல்லலாம்.
மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியாவுக்கு ஐஸ் வைக்கும் இளம் வீரர் - மும்பை ரீட்டென்ஷன் செய்யுமா?
அதேபோல், சுப்மன் கில்லை ஆர்சிபி அணிக்கு கொண்டுவர குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இரு அணிகளுக்கு இடையிலான ஒப்பந்தம் இறுதியாகவில்லை. அதனால், ரிஷப் பந்த் ஏலத்துக்கு வருவாரா? என ஆர்சிபி அணி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை அவர் ஐபிஎல் ஏலத்தில் வந்தால் எவ்வளவு தொகை கொடுத்தும் தங்கள் அணிக்கு எடுக்கவும் தயாராக இருக்கிறது.
அதேபோல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அந்த அணியில் இருந்து விலகியுள்ளார். அவர் ஐபிஎல் 2025 ஏலத்தில் பங்கேற்கிறார். கே.எல்.ராகுலையும் ஏலத்தில் எடுக்க ஆர்சிபி அணி திட்டமிட்டுள்ளது. இருப்பினும், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் கேஎல் ராகுலை எடுக்க ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆப்சனை தேடும் ஆர்சிபி அணி, ரிஷப் பந்த் அல்லது கேஎல் ராகுல் ஆகியோரில் ஒருவரை அணிக்கு கொண்டு வருவது என தீர்க்கமாக இருக்கிறது.
மேலும் படிக்க | டி20 அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் காயம்! 3 மாதம் விளையாட முடியாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ