நல்லெண்ணெய் பல மருத்துவ பண்புகளின் களஞ்சியமாகும். எள் எண்ணெய் என்னும் நல்லெண்ணெய் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவம் மற்றும் சரும பராமரிப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக எண்ணெய் மசாஜ் செய்து விட்டு குளிப்பது தென்னிந்தியாவில் இன்னும் நடைமுறையில் உள்ளது. இதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலே போடலாம். தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் தேய்த்து குளிப்பது பலரது வழக்கம்.
அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்ட நல்லெண்ணெயைக் கொண்டு கைகள் அல்லது உள்ளங்கைகளை மசாஜ் செய்வது பல நன்மைகளை அளிக்கும். முக்கியமாக நல்லெண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனால் வலி மற்றும் வீக்கத்தைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனுடன், தசை சோர்வையும் குறைக்கும்.
நல்லெண்ணெயைக் கொண்டு உங்கள் உள்ளங்கையை தவறாமல் மசாஜ் செய்தால், கிடைக்கும் நன்மைகள் ஏராளம். எள் எண்ணெய் கொண்டு உள்ளங்கையை மசாஜ் செய்வதால் என்னென்ன நன்மைகள் (Health Tips) கிடைக்கும் என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்
வலுவான தசைகள்
கைகளின் தசைகள் மற்றும் உடலின் மற்ற பாகங்கள் சுறுசுறுப்பாக இருக்க, உள்ளங்கையில் நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். நல்லெண்ணெயில் கால்சியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உங்கள் தசைகளை வலுவாக்கி சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
இரத்த ஓட்டம் சீராக இருக்கும்
உள்ளங்கையில் எள் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் சீராகும். உள்ளங்கையில் மசாஜ் செய்யும் போது, அது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, நரம்புகளை தளர்த்தி உங்கள் மனதிற்கு அமைதியையும் தருகிறது. அதுமட்டுமின்றி தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.
மேலும் படிக்க | வாட்டி எடுக்கும் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட... சில வீட்டு வைத்தியங்கள்
உடல் வீக்கம் பிரச்சனைக்கு நிவாரணம் தரும்
உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க, எள் எண்ணெயைக் கொண்டு உங்கள் உள்ளங்கைகளை மசாஜ் செய்யலாம். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது என்பதால், வீக்கத்தைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். கூடுதலாக, இது தசைகளில் ஏற்படும் பாதிப்பை கணிசமாகக் குறைக்கும்.
சரும பிரச்சனைகளுக்கு தீர்வு
கைகளில் அரிப்பு, தடிப்புகள் மற்றும் தோல் உரிதல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க, எள் எண்ணெயைக் கொண்டு உங்கள் உள்ளங்கைகளை மசாஜ் செய்யலாம். இதில் நல்ல அளவு வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ உள்ளது, இது தடிப்புகளை ஆற்றும். தழும்புகளையும் போக்கும்.
சரும ஆரோக்கியம்
சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். குளிர் காலத்தில் ஏற்படும் சரும வறட்சியைப் போக்க எள் எண்ணெயைக் கொண்டு உங்கள் உள்ளங்கையை மசாஜ் செய்யலாம். இதில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். மேலும், இது உங்கள் சருமத்தை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும்.
உள்ளங்கையில் மசாஜ் செய்யும் முறை
உள்ளங்கையில் நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் எடுத்து அதில் 1 முதல் 2 கிராம்புகளை போட்டு லேசாக சூடுபடுத்தவும். அதன் பிறகு, உங்கள் உள்ளங்கையில் எண்ணெய் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | காலையில் எழுந்ததும் வயிற்றெரிச்சல் தொந்தரவு செய்கிறதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ