உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனை இந்நாட்களில் பலரிடையே காணப்படுகின்றது. நம் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கிறதா, அல்லது, அது உடலில் உள்ள கோளாறுகளை குறிப்பிடுகிறதா என்பதை நம்மால் ஓரளவுக்கு கணித்துவிட முடியும்.
உங்கள் உடல் எடை-யும் ஆரோக்கியமற்ற முறையில் அதிகரித்தால், நீங்கள் கண்டிப்பாக 4 பரிசோதனைகளை செய்ய வேண்டும். உடல் பருமனை சாதாரணமாக புறக்கணிக்கும் தவறை யாரும் செய்யக்கூடாது.
தொடர்ந்து எடை குறைவது சில நோய்களின் அறிகுறியாக இருப்பதைப் போலவே, எடை அதிகரிப்பதும் சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். ஆகையால் உடல் எடை அதிகரிக்கும் பட்சத்தில், நிச்சயமாக உங்கள் உடல்நலப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடல் எடை அதிகரித்தால் செய்ய வேண்டிய முக்கியமான சோதனைகள் என்னவென்று இந்த பதிவில் காணலாம்.
PCOS பரிசோதனை செய்துகொள்ளுங்கள்
பிசிஓஎஸ் பிரச்சனையும் பெரும்பாலான மக்களில் எடை அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. மோசமான வாழ்க்கை முறையால் பெரும்பாலான மக்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படுகிறது. ஆகையால், உங்கள் எடை அல்லது உடல் பருமன் அதிகரித்தால், கண்டிப்பாக பிசிஓஎஸ் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனெனில் உடல் பருமன் பல நோய்களை உண்டாக்கும்.
இரத்த சர்க்கரை அளவு சோதனை
தொடர்ந்து எடை அதிகரிப்பது நீரிழிவு நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். உடல் எடை அதிகரிப்பதோடு, அடிக்கடி கழிப்பறைக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்திருக்கலாம். இந்த அறிகுறிகள் தென்பட்டால், நீங்கள் உடனடியாக இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | வெயிலில் வெள்ளரிக்காய் தரும் வேற லெவல் நன்மைகள் இதோ
தைராய்டு செயல்பாடு பரிசோதனை செய்து கொள்ளுங்கள்
உடல் எடை அதிகரித்தால் தைராய்டு பரிசோதனை செய்துகொள்வதும் அவசியமாகும். ஏனெனில் தைராய்டு காரணமாக உங்கள் எடை அதிகரித்திருக்கக்கூடும். எடை அதிகரிப்புடன் முடி உதிர்தல் மற்றும் நகம் உடைதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், உடனடியாக தைராய்டு செயல்பாடு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
லிப்பிட் ப்ரொஃபைல் சோதனை செய்ய வேண்டும்
கெட்ட கொழுப்பின் அளவை சரிபார்க்க லிப்பிட் ப்ரொஃபைல் சோதனை அவசியம். உடல் பருமன் காரணமாக பெரும்பாலானோரின் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், மாரடைப்பு அபாயமும் அதிகரிக்கிறது. இதை தவிர்க்க, உடல் எடை அதிகரிக்கும் பட்சத்தில் இந்த சோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 5 இயற்கை உணவுகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR