அதிகப்படியான காஃபின் உட்கொள்வது உங்கள் எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்றைய நவீன் வாழ்க்கை முறையில், 30 வயதிற்குப் பிறகு எலும்புகள் வலுவிழந்துவிடும் நிலை ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எலும்புகளின் ஆரோக்கியம் குறித்து, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
வயது ஏற ஏற, படிப்படியாக உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது, இதனால், எலும்புகள் மற்றும் பற்கள் மிகவும் பாதிக்கிறது. உடலில் கால்சியம் பற்றாக்குறை, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பல நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
காபியில் உள்ள காஃபின் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளப்படும் போது, இளம் வயதிலேயே எலும்புகள் பலவீனமடையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தவிர, புரதத்தை சரியான அளவில் எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலும், எலும்புகள் பலவீனமடைவதாக கூறுகின்றனர். எனவே கால்ஷியம் சத்துடன், புரதச்சத்து குறைபாட்டைப் பூர்த்தி செய்ய உங்கள் உணவில் பருப்பு வகைகள் மற்றும் புரதம் நிறைந்த பொருட்களை சேர்க்க முயற்சிக்கவும்.
மேலும் படிக்க | நரை முடி பற்றி கவலையா? இந்த செய்முறையைப் பின்பற்றவும்
இது தவிர, குளிர்பானங்கள், ஷாம்பெயின் போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்களை நீங்கள் உட்கொள்ளக்கூடாது. இது எலும்புகளை பாதிக்கிறது. கார்பனேற்றப்பட்ட பானங்களில் பாஸ்பேட் அதிகமாக உள்ளது, இது கால்சியத்தை உறிஞ்சிக் கொண்டு எலும்புகளை பலவீனப்படுத்துகிறது.
மன அழுத்தமும், எலும்புகளையும் பலவீனப்படுத்துகிறது. மன அழுத்தம் காரணமாக கார்டிசோல் என்ற ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இது இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், சிறுநீர் வழியாக வழியாக உடலில் இருந்து கால்சியம் சத்து வெளியேற்றப்பட்டு எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | வெறும் வயிற்றில் இந்த டீயை குடித்தால் தொப்பைக் காணாமல் போயிடும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR