Buttermilk Side Effects: மோர், இந்திய சமையலறைகளில் முக்கியமான இடம் பிடித்திருக்கும் ஆரோக்கிய பானம். ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த மோர், தினசரி உணவில் ஒரு அங்கமாக இருந்தாலும், கோடைக்காலத்தில் அடிக்கடி பருகும் ஆசுவாசம் அளிக்கும் பானமாகவும் இருக்கிறது.
வெயில் காலங்களில் நம்மை குளிர்ச்சியாக வைத்திருக்கும் மோர் (Buttermilk for Summer), செரிமானத்திற்கு உதவுகிறது, நமது சருமத்திற்கு மிகவும் நன்மையைக் கொடுப்பதுடன், எலும்புகளை வலுவாக்குகிறது.
உடலின் கொலஸ்ட்ரால் அளவு மற்றும் இரத்த அழுத்த அளவை குறைக்க உதவும் மோர் ஆரோக்கியத்தின் இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது.
இப்படி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள மோருக்கும் பக்கவிளைவுகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
மேலும் படிக்க | குழந்தையின் மூளை ஜெட் வேகத்தில் இயங்க வேண்டுமா; இந்த ‘6’ உணவுகளை கொடுக்கவும்
சிறிதளவு மோரில் பல ஊட்டச்சத்துகள் உள்ளன. ஒரு கிளாஸ் (245 மில்லி) அளவு கொண்ட மோரில், கலோரிகள் 98, 8 கிராம் புரதம், 3 கிராம் நார்ச்சத்து, 22% கால்சியம், 16% சோடியம் மற்றும் 22% வைட்டமின் பி12 ஆகியவை உள்ளன.
ஆனால் சிலருக்கு மோர் ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் உப்பு உள்ளடக்கத்துடன் தொடர்புடைய பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது. குறைந்த கொழுப்புள்ள மோர், அதிக கொழுப்புள்ள பிற உணவுகளைக் காட்டிலும் அதிகமான சோடியத்தை கொண்டிருக்கும்.
மோர் பற்றி உங்களுக்குத் தெரியாத மேலும் சில பக்க விளைவுகளை தெரிந்துக் கொள்வோம்.
மோர் தினமும் குடித்தால் ஏற்படும் பக்கவிளைவுகள்:
குளிர், காய்ச்சல் அல்லது ஒவ்வாமையின் போது இரவில் மோர் குடிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தயிரில் இருந்து வெண்ணெயை (Curd and Butter) பிரித்து எடுத்த பிறகு கிடைக்கிறது மோர். வெண்ணையை எடுத்த பிறகு முடிந்த அளவு விரைவில் அதை பருக வேண்டும். புளித்த மோரை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
வெண்ணெய் எடுக்காத மோரைக் குடிப்பது உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும். மோரில் சோடியம் இருப்பதால் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு மோர் தயாரிக்கும் முறை
தயிரை நன்றாக கடைந்துக் கொள்ளவும். அதில் 2 கப் தண்ணீர் சேர்க்கவும். அதனுடன் கருப்பு உப்பு (Black Salt) மற்றும் ஒரு சிட்டிகை வறுத்து பொடி செய்த சீரகம் சேர்த்து நன்கு கலந்து, வடித்த பிறகு குழந்தைக்கு கொடுக்கவும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்றாக இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. நமது ஆரோக்கியத்திற்கு செலவில்லாமல் கிடைக்கும் ஒரே பானம் மோர். இதில் சில தீமைகள் இருந்தாலும் சரிவர செய்து குடித்தால் ஆரோக்கியத்திற்கு நல்லதே.
மேலும் படிக்க | பரோட்டா பிரியர்களுக்கு ஒரு பகீர் தகவல்! மைதா எலும்புகளை பலவீனமாக்கும்; எச்சரிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR