உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. ஒன்று 'நல்ல கொலஸ்ட்ரால்' மற்றொன்று 'கெட்ட கொலஸ்ட்ரால்'. உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க ஆரம்பித்தால், மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க பெரும்பாலானோர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இருப்பினும், வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கலாம்.
'நல்ல கொலஸ்ட்ரால்' எச்டிஎல் என்றும், 'கெட்ட கொலஸ்ட்ரால்' எல்டிஎல் என்றும் அழைக்கப்படுகிறது. நல்ல கொலஸ்ட்ரால் நம் இதயத்திற்கு நன்மை பயக்கும். இது இரத்தத்தில் உள்ள கூடுதல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்
உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் நடைபயிற்சி, ஓட்டம், ஜாகிங், நீச்சல் ஆகியவற்றை செய்யலாம், அல்லது ஜிம்மிற்குச் சென்றும் உடற்பயிற்சி செய்யலாம்.
மேலும் படிக்க | இந்த ஜூஸை அதிகமாக உட்கொண்டால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்
பதப்படுத்தப்பட்ட உணவை தினசரி உணவில் இருந்து விலக்குங்கள்
பதப்படுத்தப்பட்ட உணவு என்பது முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு நீண்ட காலத்திற்குப் பிறகு பயன்படுத்தப்படும் உணவுகளாகும். கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் டிரான்ஸ் ஃபேட் மற்றும் சாச்சுரேட்டட் ஃபேட் இவற்றில் அதிகமாக இருப்பதால், அத்தகைய உணவை உங்கள் தினசரி உணவில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
அதிக இனிப்புகளை சாப்பிட வேண்டாம்
இனிப்புகளை அதிகமாக சாப்பிடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் சர்க்கரையை அதிகமாக சாப்பிடுவதால், கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து, நல்ல கொழுப்பின் அளவு குறையத் தொடங்குகிறது. எனவே, உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க இனிப்புப் பொருட்களைத் தவிர்க்கவும்.
புகைபிடிப்பதில் இருந்து விலகி இருங்கள்
உடல் எடையை குறைப்பதும் மிக முக்கியம். உங்கள் எடை அதிகரித்திருந்தால், நீங்கள் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். இதனுடன், நீங்கள் புகைபிடிப்பதையும் தவுர்க்க வேண்டும். ஏனெனில் புகைபிடிப்பது உங்கள் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளின் கவனத்திற்கு; இந்த மருந்தினால் பிறப்புறுப்பில் தொற்று ஏற்படலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR