Weight Loss Tips: உடல் எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். எதை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல, எதை செய்தால் உடல் எடை குறையும் என்ற நிலையில்தான் பலர் இன்று உள்ளனர். உடல் பருமனை குறைக்க, ஜிம், உணவு கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சிகள் என பல வித முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், இவற்றாலும் அனைவருக்கும் வேண்டிய விளைவுகள் கிடைக்கின்றன என கூறி விட முடியாது.
பல பெரிய, சிக்கலான வழிகளை பற்றி நினைக்கும் நாம் பல சமயங்களில் சில எளிய வழிகளை மறந்துவிடுகிறோம். சில எளிய இயற்கையான வழிகளிலும் நாம் உடல் எடையை குறைக்கலாம். இவற்றால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருக்கும். நம்மை சுற்றியே தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெள்ளரிக்காய் ஆண்டு முழுதும் கிடைக்கும் ஒரு காயாகும். வெள்ளரிக்காய் நீர் உடல் எடையை குறைக்க உதவும் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்ல. வெள்ளரிக்காயில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வெள்ளரியின் நீரிலும் அத்தியாவசிய தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் ஆகியவை நிரம்பியுள்ளன. இது உங்கள் ஊட்டச்சத்து உட்கொள்ளலை அதிகரித்து எடை இழப்பில் உதவுகின்றது.
மேலும் படிக்க | மன அழுத்தம் முதல் மாரடைப்பு வரை... வியக்க வைக்கும் கெமோமில் டீ..!!
எடை இழப்புக்கு வெள்ளரி தண்ணீர் (Cucumber Water For Weight Loss)
வெள்ளரி தண்ணீரில் இருக்கும் சில பண்புகள் இதை எடை இழப்புக்கு பயனுள்ளதாக ஆக்குகின்றன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
- செரிமானம்: வெள்ளரியில் எரிப்சின் உள்ளது. இது புரதங்களை உடைக்க தேவையான செரிமான நொதியாகும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- திருப்தி உணர்வு: நார்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்க வைக்கிறது. இது பசியைக் கட்டுப்படுத்தி அதிகப்படியான உணவு உட்கொள்ளலைத் தடுக்கிறது.
- குறைந்த கலோரிகள்: அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட வெள்ளரிக்காய் ஒரு சிறந்த சிற்றுண்டியாக செயல்படும். இதை பச்சையாக சாப்பிட்டாலும் அல்லது தண்ணீரில் ஊறவைத்தாலும், எடை குறைய உதவுகிறது.
- வளர்சிதை மாற்றம்: வெள்ளரிக்காய் நீரை தினசரி உட்கொள்வது உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும். இது எடை இழப்பை எளிதாக்குகிறது.
எடை இழப்புக்கு வெள்ளரிக்காய் தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்?
காலையில் எழுந்தவுடன் இரண்டு கிளாஸ் வெள்ளரிக்காய் தண்ணீர் குடிப்பது சிறந்தது. இது வயிற்றை நிரப்பி அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்க உதவுகிறது. சாப்பிடுவதற்கு முன் இதை உட்கொள்வதும் நன்மை பயக்கும்.
வெள்ளரிக்காய் தண்ணீர் தயாரிப்பது எப்படி?
மிகவும் எளிதாக வெள்ளரி தண்ணீரை தயார் செய்யலாம். இந்த பானத்தை தயாரிக்க வெள்ளரிகளை நன்கு கழுவி, சுத்தம் செய்து, தோலை உரிக்கவும். இதற்குப் பிறகு, வெள்ளரிக்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டி, நீரில் போட்டு வைக்கவும். இந்த நீரில் எலுமிச்சை துண்டுகள், புதினா இலைகள், இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இதை அப்படியே அல்லது ஐஸ் கியூபுகள் சேர்த்து குளிர்ச்சியாகவும் குடிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பாலுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ