White Hair Prevention Tips Tamil | இளம் வயதில் வெள்ளை முடி வருவதை யாருமே விரும்புவதில்லை. ஆனாலும் சிலருக்கு இளம் வயதில் நரைமுடி வளரத் தொடங்கிவிடுகிறது. இதற்கு என்ன காரணம் என்று அலசி பார்த்தால், பல வகையான காரணிகள் வெள்ளை முடி வருவதற்கு அடிகோடிட்டு காட்டப்படுகிறது. பொதுவாக வயதாவதற்கான அறிகுறியாக வெள்ளை முடி பார்க்கப்படுகிறது. இது எல்லோருக்கும் பொருந்ததாது. மற்ற காரணிகளை பார்த்தால், மன அழுத்தம், மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு முறைகள் எல்லாம் வெள்ளை முடி வளருவதற்கான முதன்மையான காரணங்களாகும். இதில் சில மாற்றங்களை நீங்கள் அவசியம் செய்யும்போது மேலும் வெள்ளை முடி வளராமல் தடுக்க முடியும். எந்தெந்த விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
வெள்ளை முடி வராமல் தடுக்க வழிமுறை :
1. பதற்றம் கூடாது
இன்றைய பிஸியான வாழ்க்கையில், ஒருவருக்கு அழுத்தம் இருப்பது இயல்பாகிவிட்டது. பெரும் பொறுப்புகளை சுமப்பவர்கள் இயற்கையாகவே மன அழுத்ததில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நரைமுடி வளரத் தொடங்குகிறது. இது குறித்து எடுக்கப்பட்ட பல ஆய்வுகளிலும் மன அழுத்தமே வெள்ளை முடிக்கு காரணம் என அடிக்கோடிட்டு காட்டியுள்ளன. அதனால், முடிந்தவரை, உங்கள் மனதை அமைதியாக வைத்திருங்கள். எந்த விஷயங்களுக்கு பெரிய ரியாக்ஷன் கொடுக்கவே வேண்டாம். உங்களை அமைதியாக வைத்துக் கொள்ள தியானம், யோகா செய்யுங்கள்.
மேலும் படிக்க | வெள்ளை முடி, நரைமுடியை தடுக்க.. இந்த டிப்ஸ் 'கேரன்ட்டி' பலன் தரும்
2. ஆரோக்கியமற்ற உணவு வேண்டாம்
நம்மில் பெரும்பாலானோர் எண்ணெய் மிகுந்த உணவுகள், நொறுக்குத் தீனிகளை விரும்பி சாப்பிடுகிறோம். ஏனெனில் அது மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அந்த சுவைக்காக, சாப்பிடும் உணவுகள் தான் ஹார்மாற்றங்களுக்கு வழிவகுத்து நம் முடியை சேதப்படுத்துகின்றன. சிறு வயதிலேயே நரை முடியை தவிர்க்க விரும்பினால், புரதம், பயோட்டின், இரும்பு, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் துத்தநாகம் நிறைந்த உணவுகளை அதிகம் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
3. போதுமான தூக்கம்
தூக்கமின்மை உடலின் பல பாகங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் அதேநேரத்தில் நம் தலைமுடியும் அதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. குழந்தைகள் 10 மணி நேரம் தூங்க வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 7-8 மணிநேரம் தூங்க வேண்டும். இல்லையெனில் வெள்ளை முடி தோன்றுவதைத் தடுக்க முடியாது.
4. எண்ணெய் மசாஜ்
நம் தலைமுடிக்கு உள் ஊட்டச்சத்து மற்றும் வெளிப்புற ஊட்டச்சத்து தேவை. வெள்ளை முடி தோன்றுவதைத் தடுக்க விரும்பினால், இயற்கை எண்ணெய்களைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். இதற்கு ஆலிவ் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், கடுகு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
5. புகைபிடிப்பதை நிறுத்துங்கள்
சிகரெட், பீடி, சுருட்டு, கஞ்சா, குட்க்கா போன்ற பழக்கங்களுக்கு இளம் வயதினர் பலர் அடிமையாகி உள்ளனர். அவர்களுக்கு வெள்ளை முடி இயல்பாக வளரத் தொடங்கிவிடும். எனவே, வெள்ளை முடியை விரும்பாதவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை விரைவில் கைவிடுங்கள்.
மேலும் படிக்க | மோசமான தூக்கம் சுகர் வரும் ஆபத்தை அதிகரிக்குமா...? கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ