Snoring Problem Home Remedies : வயது வந்தவர்களில், 45 சதவிகிதம் பேர்களுக்கு குறட்டை பிரச்சனை இருப்பதாக ஒரு ஆயவறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு உதாரணமாக உங்கள் வீட்டையே கூட எடுத்துக்கொள்ளலாம். உங்கள் வீட்டில், குறைந்தது யாரேனும் ஒருவர் குறட்டை விடுபவராக இருப்பார். அதிலும், இந்த குறட்டை பிரச்சனை புதிதாக திருமணம் ஆன தம்பதிகளுக்கு இடையே கூட சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். குறட்டை விடும் பிரச்சனை கொண்டவர்களின் துயரத்தினை கூறும் வகையில், ‘குட் நைட்’ மற்றும் ‘டியர்’ போன்ற படங்கள் எடுக்கப்பட்டன. இவை, இந்த பிரச்சனை குறித்து ஆழ்ந்து பேசவில்லை என்றாலும், அதை எப்படி சமாளிக்கலாம் என்பதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது. குறட்டை பிரச்சனையை சமாளிக்க, சில வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
உங்கள் தூக்க நிலையை (position) மாற்றுங்கள்:
நீங்கள் உங்கள் முதுகுப்புறமாக படுத்து தூங்குவது, உங்கள் நாக்கிலிருகும் அடி மற்றும் தொண்டையின் மென்மையான பகுதியை மோத செய்யும். எனவே, அப்படி நிமிர்ந்து படுக்கையில் குறட்டை விடுவதற்கு பல வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, வலது புறம் அல்லது இடது புறம் படுத்து இந்த குறட்டை விடும் பிரச்சனைக்கு தீர்வு கட்டலாம். உங்கள் உடலுயற தலையணையை பக்கங்களில் வைத்து படுப்பது, இதற்கு உதவும்.
உடல் எடை குறைப்பு:
ஒரு சிலர், உடல் எடை அதிகமாக இருப்பதாலும் கூட குறட்டை பிரச்சனை வரும் என கூறப்படுகிறது. ஆனால், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் மட்டுமல்ல, ஒல்லியாக இருப்பவர்களுக்கும் கூட குறட்டை வரலாம். கழுத்து பகுதி, குறிப்பாக குரல் வளையம் இருக்கும் பகுதியில் அதிக தசை இருந்தால் குறட்டை பிரச்சனை ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால், உங்கள் குரல் வளையம் தசைகளில் மோதி, தூக்கத்தில் குறட்டை ஒலியை எழுப்பலாம்.
மேலும் படிக்க | மாதவிடாய் கோளாறா? இயற்கையாக சரிசெய்ய..‘இதை’ சாப்பிடுங்க..!
மது குடிப்பதை தவிர்க்கவும்:
மது உள்பட போதைக்காக உபயோகப்படுத்தும் பொருட்கள், தொண்டையில் இருக்கும் தசைகளை ஓய்வெடுக்க விடாமல் செய்யுமாம். குடித்து விட்டு தூங்கினால், பின் தொண்டையில் இருக்கும் தசைகளினால் குறட்டை ஒலி வரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து பேசும் மருத்துவர்கள், தூக்க நேரத்தின் போது மது அருந்துதலை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். பொதுவாக குறட்டை வராதவர்களுக்கு கூட, குடித்த பின்பு குறட்டை வருவதாக ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சரியான தூக்கம்:
சரியான தூக்கம் இல்லதவர்களுக்கு கூட, இந்த குறட்டை பிரச்சனை ஏற்படலாம் என்கின்றனர், மருத்துவர்கள். அதிக நேரம் வேலை பார்ப்பது, நீண்ட நேரம் கண் விழித்துக்கொண்டிருப்பது போன்ற பிரச்சனைகள் இது போன்ற தூக்கமின்மைக்கு வழிவகுக்கலாம்.
நாசி பாதை:
பலர், தூங்கும் போது மட்டுமன்றி சாதரணமாக கூட, வாயால் மூச்சு விடுவர். மூக்கால் மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதால் இவர்கள் அப்படி செய்கின்றனர். மூக்கடைப்பு, மூக்கில் இருக்கும் கோளாறால் வாய் மூச்சு விடுவது போன்ற பிரச்சனைகளால் குறட்டை பிரச்சனை ஏற்படலாம். எனவே, நாசியில் இருக்கும் பிரச்சனையை நிவர்த்தி செய்து, வாயால் மூச்சு விடுவதை தவிர்க்க வேண்டும்.
உடலில் நீர்ச்சத்து இருக்க வேண்டும்:
தொண்டை வறட்சி காரணமாக கூட குறட்டை பிரச்சனை ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள். தூங்கும் போது, நாசி மற்றும் தொண்டை பகுதிகள் வறண்டு போவதால், குறட்டை ஒலி எழும்பலாம். எனவே, உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பது நல்லது. தூங்குவதற்கு முன்பு நாசியை நன்றாக தண்ணீர் கொண்டு கழுவுவது, தூங்குவதற்கு 20-30 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் அருந்துவது போன்ற நடவடிக்கைகளால் இதை தவிர்க்கலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வயிற்றுப்போக்கை குணப்படுத்த இந்த ஆயுர்வேத பானங்கள் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ