உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி?

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறைகள் இருக்கின்றன.

Written by - க. விக்ரம் | Last Updated : May 12, 2022, 05:55 PM IST
  • உடல் எடையை குறைக்க வழிகள்
  • உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்கலாம்
உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி? title=

மனிதர்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது எப்போதும் சிம்ம சொப்பனமாகவே இருக்கும். உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும் என்றாலும் உடற்பயிற்சி செய்வதற்கான ஆர்வமோ, நேரமோ இங்கு பலரிடம் இருப்பதில்லை.

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி என்ற வழிமுறையை காணலாம்.

உணவில் கட்டுப்பாடு:

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம். உணவு உட்கொள்வதற்கு முன்பாகவே பசியை தீர்க்கும் வழிமுறைகளை யோசிக்க வேண்டும்

அந்தவகையில், குறிப்பிட்ட இடைவெளியில் சீராக தண்ணீர் பருகுதல், உலர் பழங்களை சாப்பிடுதல் பசியை அதிகம் கட்டுப்படுத்திவிடும்.

நார்ச்சத்து உணவுகள்:

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது  நல்லது. அந்தவகை உணவுகள் செரிமானத்தை அதிகப்படுத்துவதோடு நீண்ட நேரம் உற்சாகமாக செயல்படவும் வழிவகுத்து உடல் எடையை கட்டுப்படுத்தும்.

தண்ணீர்:

நமது உடலில் நீர்ச்சத்தை தக்க வைப்பதும் உடல் எடையை குறைக்க உறுதுணையாக இருக்கும். எனவே தண்ணீரை பருகுதல், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுதல் போன்ற செயல்முறைகள் உடல் எடையை கட்டுப்படுத்த சிறந்த வழியாகும்.

Weight Loss

தூக்கம்:

தேவையான நேரம் தூங்குவது மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோனை கட்டுப்படுத்தி பசியையும்  குறைக்கும். அதேபோல் தூக்கமின்மையால் அவதிப்பட்டால் உடல் பருமன் அதிகரித்துவிடும். 

மேலும் படிக்க | Health Tips: தக்காளியின் நோய் உருவாக்கும் பக்கம்: தக்காளியால் இவ்வளவு பிரச்சனையா

குறிப்பாக, தூக்கத்தை இழக்கும்போது மன அழுத்தத்துடன் தொடர்புடைய கார்டிசால் ஹார்மோனின் உற்பத்தி அதிகமாகும். அதனால் கொழுப்பு அதிகமாகி, உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் படிக்க | Health Alert: இந்த பழங்களை இரவில் சாப்பிட வேண்டாம்; எச்சரிக்கும் நிபுணர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News