சிறுநீரக கடுப்பா? இல்லை அடைப்பா? கவலையே வேண்டாம் மஞ்சள் தேநீர் ஒண்ணே போதும்!

Turmeric tea for kidney health: சிறுநீரக குழாய் அடைப்பு, சிறுநீரகக்கல் உட்பட உடலின் கழிவு பிரிப்பு மற்றும் வெளியேற்றும் செயல்முறைகளைக் கட்டுப்படுத்தும் நெஃப்ரான்களை பாதுக்காக்கும் அற்புதமான மஞ்சள் மந்திரம்....  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 19, 2024, 09:50 AM IST
  • சிறுநீரக பாதுகாப்பும் மஞ்சளும்
  • மஞ்சளில் உள்ள குர்குமினின் அற்புதம்
  • சிறுநீரகக் கோளாறுகளுக்கான மூலிகைத் தீர்வு
சிறுநீரக கடுப்பா? இல்லை அடைப்பா? கவலையே வேண்டாம் மஞ்சள் தேநீர் ஒண்ணே போதும்! title=

நமது உடலின் செயல்பாடுகளின் போது கழிவுகளை சுத்திகரித்து நீராக வெளியேற்றும் பணியை செய்வது சிறுநீரகம். இந்த உறுப்பு சீராக இயங்கும் வரையில் தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். சிறுநீரகத்தின் வேலையில் உறுதுணையாக இருக்கும் உடல் உறுப்புகள் மந்தமாக செயல்படுவது, சிறுநீரகத்தில் பிரச்சனை என உடலின் கழிவு பிரிப்பு மற்றும் வெளியேற்றும் செயல்முறையில் பாதிப்பு ஏற்பட்டால் அது வலியை ஏற்படுத்தும், வாழ்நாளையும் குறைக்கும்.

யூரியா போன்ற இரசாயன கழிவுப் பொருட்களை இரத்தத்தில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் உறுப்பு சிறுநீரகத்தை பாதுக்காக்கும் வழிகள் பல என்றாலும் அதில் மிகவும் சுலபமானதும் ஆரோக்கியமானதும் மஞ்சள் எனப்படும் மகத்துவம் மிக்க மசாலா என்றால் அது மிகையாகாது.

சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிப்பதில் சிறுநீரகக் கல் முக்கியமானது என்பது பலரும் அறிந்தது. ஆனால், நெஃப்ரான் என்பதும் சிறுநீரகம் சீராக செயல்பட உதவும் மிகவும் முக்கியமான ஒன்று என்பது பலருக்குத் தெரியாது. 

நெஃப்ரான் என்பது சிறுநீரகத்தின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு அலகு, இது சிறுநீரக கார்பஸ் மற்றும் சிறுநீரகக் குழாய் ஆகியவற்றால் ஆன நுண்ணிய அமைப்பு என்பது குறிப்பிடத்தகக்து. சிறுநீரகம் மற்றும் சிறுநீரகக்குழாயில் மில்லியன் கணக்கான நெஃப்ரான்கள் உள்ளன. கார்டிகல் நெஃப்ரான், ஜக்ஸ்டாமெடுல்லரி நெஃப்ரான் என நெஃப்ரானில் இரண்டு வகைகள் உள்ளன. இவற்றில், புறணிக்குள் இருக்கும் நெஃப்ரான்களான கார்டிகல் வகை 80% உள்ளது. எஞ்சிய 20 சதவிகிதம் ஜக்ஸ்டாமெடுல்லரி நெஃப்ரான் ஆகும்.

மேலும் படிக்க | TasteAtlas: சுவையான காபிகள் பட்டியலில் இரண்டாவது இடம் தமிழ்நாட்டின் ஃபில்டர் காஃபிக்குத் தான்!

இவை, திடக்கழிவுகள் மற்றும் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான நீர் உட்பட அனைத்து கழிவுப்பொருட்களையும் நீக்குகிறது, இரத்தத்தில் இருந்து கழிவுகளை பிரித்து நீராக, சிறுநீராக மாற்றுகிறது. இரத்தத்தை நெஃப்ரான் சுத்திகரித்த பிறகு, அதனைச் சுற்றியுள்ள இரத்தம் சிறுநீரக இரத்த நாளங்கள் வழியாக மீண்டும் உடலுக்குள் செல்கிறது, அவை நச்சுகள் மற்றும் பிற அதிகப்படியான பொருட்கள் இல்லாத நமது உடலின் இயக்கத்திற்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட இரத்தம் ஆகும். 

நெஃப்ரானால் பிரித்தெடுக்கப்பட்ட கழிவு நீர் தான் சிறுநீர், இது சேகரிக்கும் குழாய் வழியாக சிறுநீர்ப்பைக்கு செல்கிறது, அங்கு அது சேமிக்கப்பட்டு சிறுநீர்க்குழாய் வழியாக வெளியேறுகிறது.

இப்படி நமது உடலின் இயக்கத்திற்கு முக்கியமான பணியைச் செய்யும் நெஃப்ரான்களில் பிரச்சனை வந்தால், சிறுநீரகம் பாதிப்படையும். இது சிறுநீரக குழாய் அடைப்பு என்று அறியப்படுகிறது. கழிவுகள் உடலிலேயே தங்கிவிட்டால் சிறுநீரகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து, பிற உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். 

சிறுநீரக நெஃப்ரான்கள் பாதிக்கப்படுவதற்கும், அடைபடுவதற்கும் பல காரணங்கள் உள்ளன. சிறுநீரக கற்கள், இரத்தக் கட்டிகள் அல்லது நெஃப்ரான்களுக்குள் புரதங்கள் உருவாவது என பல காரணங்கள் உண்டு. அதேபோல, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல் அமைப்பு ரீதியான உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் நெஃப்ரான்கள் அடைபடுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.

ஆனால், இந்த மிகப் பெரிய அபாயத்தை ஒன்றுமே இல்லாமல் போக்கிவிடும் ஒற்றை மூலிகை ஒன்று நம் கையில் இருக்கும்போது, அதை  பயன்படுத்தினால் ஆரோக்கியமாக வாழலாம். அந்த ஒரே ஒரு ஆயுர்வேத மூலிகை மஞ்சள்.சிறுநீரக நெஃப்ரான்களின் அடைப்பை அகற்றவும், அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் மஞ்சளை சுலபமாக பயன்படுத்தலாம்.  

குர்குமினின் சக்தி
மஞ்சளில் குர்குமின் என்ற சக்திவாய்ந்த கலவை உள்ளது, இது ஈர்க்கக்கூடிய அழற்சி எதிர்ப்பு திறன்களைக் கொண்டுள்ளது. மஞ்சள் தேநீரை தவறாமல் உட்கொள்வது சிறுநீரகங்களில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்துப் போராடலாம் மற்றும் ஏதேனும் அடைப்புகளை அகற்ற உதவும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மஞ்சள்
குர்குமின் அதன் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற தன்மைக்காக பாராட்டப்படுகிறது. மஞ்சள் தேநீரை வழக்கமாக உட்கொள்வது நமது சிறுநீரகங்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் மற்றும் சிறந்த சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மேலும் படிக்க | Weight Loss: உடல் பருமனால் கவலையா? பப்பாளியை இப்படி சாப்பிட்டால் ஓவர் வெயிட்டுடன் கவலையும் போய்விடும்

சிறுநீரக நோய்கள்

சிறுநீரக கடுப்பு, சிறுநீர்க நெஃப்ரான்கள் அடைப்பு என பல பிரச்சனைகளை போக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த மஞ்சள் தேநீரில், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் என பல நன்மைகள் உள்ளன. இந்த தேநீரை வழக்கமாகவே வாரம் இருமுறை பருகுவது நல்லது.  
 
மஞ்சள் தேநீர் தயாரிக்க தேவையான் பொருட்கள்
தண்ணீர் 2 டம்ளர்
சுக்கு அரை தேக்கரண்டி அல்லது நறுக்கிய இஞ்சி 1 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை கால் தேக்கரண்டி
குருமிளகுத் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி (பச்சை மஞ்சள் என்றால் ஒரு தேக்கரண்டி)
வெல்லம் அல்லது தேன் (தேவைப்பட்டால் மட்டும்)

மஞ்சள் தேநீர் செய்முறை

தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் சுக்கு அல்லது இஞ்சியை சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்கும்போது, அதில் குருமிளகு மற்றும் இலவங்கப்பட்டையை சேர்க்கவும். இரண்டு நிமிடம் கழித்து அதில் மஞ்சள் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். பசும் மஞ்சள் சேர்த்தால், ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்த பிறகு, தேநீரை வடிகட்டி, தேவைப்பட்டால் வெல்லம் அல்லது தேநீர் கலந்து பருகவும்.

(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குழந்தைகளையும் பாடாய் படுத்தும் சிறுநீரகக் கல்! நொறுக்குத்தீனிக்கு நோ சொல்லுங்க பெற்றோர்களே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News