உடற்பயிற்சியில் பல நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் குறிப்பாக மாலை நேர உடற்பயிற்சிகளும் உடலுக்கு நல்ல பலன்களை தரும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். மாலை நேர உடற்பயிற்சி உடலுக்கு நல்லதா..? எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு அதிக பலன்களை தரும்..?
உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் காலையா? மாலையா?
உடற்பயிர்சியை எப்போது செய்ய வேண்டும் என்பது பலருக்கு கேள்விக்குரியாகவே இருக்கும். சொல்லப்போனால், மருத்துவர்களிடமே இதற்கான சரியான விளக்கம் இல்லை. ஒரு சிலர், காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வது நல்லது என கூறுகின்றனர். ஒரு சிலர், மாலை நேர் உடற்பயிற்சிகளில் பல நன்மைகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால், இரண்டு வேளைகளில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் வேறு பட வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுருத்துகின்றனர். மாலை நேர உடற்பயிற்சிகளால் ஏற்படும் மகத்துவங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | மூளையை கூர்மையாக்கும் ‘சில’ சூப்பர் சைவ உணவுகள்!
மன அழுத்தத்தை குறைக்கும்:
மாலையில் ஒரு உடற்பயிற்சி செய்வது நாள் முழுவதும் உங்களுக்குள் குவிந்திருக்கும் மன அழுத்தத்தை குறைக்க உதவுமாம். அது மட்டுமன்றி, இரவில் நல்ல உறக்கத்திற்கும் மாலை நேர உடற்பயிற்சிகள் உதவும். உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் கொழுப்பு சேராமல் தடுக்கவும் மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்யலாம் என மருத்துவர்கல் ஆலோசனை கூறுகின்றனர்.
உடலை தளர்வாக்கும்:
நீங்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவராக இருந்தால், உங்களுக்கு மாலை நேர உடற்பயிற்சி மிகவும் நல்லது. ஒரே இடத்தில் உட்காருவதாலோ, நிற்பதாலோ நம் தசைகள் இறுகும். இதை தளர்வாக்கவும், உடலை ரிலாக்ஸ் செய்யவும் மாலை நேரங்களில் மிதமான உடற்பயிற்சிகளை செய்யலாம். இது, பலருக்கு பதற்றத்தை குறைக்கவும் வழிவகை செய்துள்ளது.
அதிக நேரம் உடற்பயிற்சி செய்யலாம்:
நாம், காலையில் உடற்பயிற்சி செய்கையில் பள்ளி, கல்லூரி அல்லது அலுவலகம் என எதற்காவது செல்ல வேண்டி இருக்கும். இதனால், உடற்பயிற்சிக்கென்று சிறிது நேரம் மட்டுமே ஒதுக்க வேண்டியிருக்கும். அதுவே, மாலை நேரம் நமக்கான நேரத்தை நாமே எடுத்து கொள்ளலாம். குறிப்பிட்ட கால அளவு இன்றி நன்றாக உடற்பயிற்சி செய்யலாம். இதனால், மாலை நேர உடற்பயிற்சி சிறந்தது என சிலர் கருதுகின்றனர்.
நன்றாக உடற்பயிற்சி செய்யலாம்:
காலை நேரத்தை விட மாலை நேரத்தில் சிறப்பாக உடற்பயிற்சி செய்யலாம் என சில உடற்பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். காலையில் தூக்கத்தி இருந்து எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வதால் உடல் சுறுசுறுப்பாகத்தான் இருக்கும். ஆனால், உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த புதிதில் நாள் முழுவதும் சோர்வாக உணர்வீர்கள். சமயங்களில் அதீத காலை உடற்பயிற்சியால் மதிய நேரத்தில் தூக்கம் வரும், அல்லது மாலை நேரத்தில் மிகவும் சோர்வு மனநிலைக்கு உள்ளாவீர்கள். மாலை நேர உடற்பயிற்சிகளில் இதையெல்லாம் தவிர்க்கலாம்.
மாலை நேர உடற்பயிற்சிகள்:
மாலை நேரத்தில் செய்ய உகந்த உடற்பயிற்சிகள்..
-ப்ளாங்க் (Plank)
-சைல்ட் போஸ் (Child Pose)
-ஸ்ட்ரெட்ச் (Stretch)
-நீச்சல் பயிற்சி (Swimming)
-சைக்கிள் ஓட்டுவது (Cycling)
-மூச்சுபயிற்சி (Breathing Exercises)
-மிதமான யோகாசனங்கள் (Mild Yoga exercises)
மேலும் படிக்க | கெத்தான சைவ கொத்து பரோட்டா! மதுரையில் கிடைக்கும் அதே சுவையில் வீட்டிலே சமைக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ