ஆண்கள் யோகாசனம் செய்யலாமா? அப்படி செய்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்?

Yoga Asanas Health Benefits: ஆண்கள் யோகாசனம் செய்யலாமா கூடாதா என்ற பெரிய சந்தேகம் பலருக்கு இருக்கிறது. இதற்கு மருத்துவர்கள் கூறுவது என்ன?   

Written by - Yuvashree | Last Updated : Feb 28, 2024, 07:04 PM IST
  • ஆண்கள் யோகா செய்வதனால் ஏற்படும் நன்மைகள்
  • ஆண்கள் ஏன் யோகா செய்ய வேண்டும்?
  • இதனால் என்ன பலன் உண்டு?
ஆண்கள் யோகாசனம் செய்யலாமா? அப்படி செய்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்?  title=

Yoga Asanas Health Benefits For Men: யோகாசனங்கள் செய்வதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. உடலை ஃப்ளெக்ஸிபில் ஆக வைத்துக்கொள்வதற்கும், கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கும், யோகாசனங்கள் உதவுகிறது. 

ஆண்கள் யோகாசனங்கள் செய்யலாமா? 

ஆண்கள், தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம்மில் சேர்ந்துகொண்டு, ஸ்ட்ரிக்ட் ஆன டயட்டை மேற்கொள்வர். ஆனால், அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு யோகாசனங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது தோன்றாமலேயே இருக்கும். யோகாசனம், தொன்றுதொட்டு பல ஆண்டு காலங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. யோகாசனங்களை ஆண்கள் செய்வதை விட, பெண்கள்தான் அதிகமாக செய்கின்றனர். ஆண்கள் யோகாசனங்கள் செய்வதால், பல நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? 

ஆண்களுக்கு யோகாசனங்கள் நல்லதா?

யோக ஆசனங்கள் என்பது நல்ல சுவாச பயிற்சியாக பார்க்கப்படுகிறது. உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கவும் யோகா உதவுகிறது. விளையாட்டு வீரர்கள், செலிப்ரிட்டிகள், ஃபிட்னஸ் உடற்பயிற்சியாளர்கள் என பலர், யோகாசன பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். அதனால், யோகாசனங்கள் செய்வது ஆண்களுக்கு நன்மை பயக்கும் என மருத்துவர்களும், உடற்பயிற்சி ஆர்வலர்களும் கூறுகின்றனர். 

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது:

யோகா ஆசனங்கள் செய்வதால், தசைகள் கடினமாக ஆகாமல் இருப்பதை தவிர்க்க முடியும். உள்ளிருக்கும் எலும்புகளை வலுப்படுத்துவதால், உடல் நெகிழ்வான தோற்றம் அடைகிறது. இதனால் முதுகு வலி, நாள்பட்ட வலி, எலும்பில் ஏற்படும் வலியையும் இது சரி செய்கிறது.

மேலும் படிக்க | ஊட்டச்சத்து இருந்தாலும் எலும்பு ஆரோக்கியத்திற்கு எதிரியாகும் ‘சில’ ஆரோக்கிய உணவுகள்!

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது:

யோகா செய்வதால், உடலில் ஆக்சிஜன் பரிமாற்றம் முழுவதுமாக செல்வதற்கு உதவுகிறது. இதனால், உடலில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. உடலை ட்விஸ்ட் செய்து செய்யும் ஆசனங்களினால், இந்த ரத்த ஓட்டத்தை மேலும் அதிகரிக்கலாம்.

இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

2012ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தொடர்ந்து யோகா செய்பவர்களுக்கு இருதய நோய் குறைபாடுகள் குறைவாக ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யோகா செய்வதனால், இதய துடிப்பு சீரான வேகத்தில் துடிப்பதோடு மட்டுமன்றி, மூச்சு பயிற்சியும் சீராக நடைபெறுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. 

மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற மன ஆரோக்கியத்தை கெடுக்கும் பிரச்சனைகள்  இன்று தனிநபர்களிடையே மிகவும் பொதுவானவையாக இருக்கின்றன. இந்த பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், மக்கள் தங்கள் மனநலத் தேவைகளைப் சரி செய்து கொள்ள விரும்புகின்றனர். மன அழுத்தத்தை கையாள்வதற்கு, யோகா சிறந்த கருவியாக பார்க்கப்படுகிறது. 

மனதை சாந்தப்படுத்த உதவுகிறது:

அமைதியான மனதை பெறுவதற்கு, யோகா ஆசனங்கள் உதவுகிறது. உள்ளூர இருக்கும் சிந்தனைகள், மற்றும் உங்களை பற்றிய புரிதலை நீங்களே உருவாக்கி கொள்ள, யோகா உதவுகிறது. பயம், மனதை ஆக்கிரமிக்கும் தவறான எண்ணங்கள் ஆகியவற்றை போக்குவதற்கும் யோகாசனம் உதவுகிறது. 

பிற நன்மைகள்:

>முதுகு வலியை சரிசெய்யும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 
>உடலில் க்ளூகோஸ் அளவு அதிகரிக்க உதவலாம்.
>பாலியல் வாழ்க்கைக்கு உதவுகிறது
>நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது. 

மேலும் படிக்க | தினமும் ஏன் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்? காரணம் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News