மாறிவரும் வாழ்க்கை முறையால் பலவித மாற்றங்கள் நமது உடலில் ஏற்பட்டு வருகிறது. இதன் விளைவாக நமக்கு வருகின்ற மிக பெரிய பாதிப்பு உடல் பருமன். குறிப்பாக சரியான தூக்க முறை இல்லாதவர்களுக்கு இயற்கையாகவே உடல் எடை கூடிவிடும்.
உடல் எடை அதிகரிப்பால் சிரமப்படுபவர்கள் பல முறைகளை பின்பற்றுகிறார்கள், ஆனால் பல லட்சம் முயற்சிகள் செய்தும் உடல் எடை குறைவதில்லை. இதற்கு ஒரே தீர்வு உங்கள் உணவில் ஒருமுறை கவனம் செலுத்துவதே. எனவே இந்த குறிப்பிட்ட உணவு பொருட்களை தவிர்த்தால் உங்கள் எடை விரைவில் குறைக்கலாம்.
மேலும் படிக்க | அஸ்வகந்தாவின் ஆரோக்கிய நன்மைகள்: ஆண்களுக்கோ இது ஒரு ஆபத்பாந்தவன்
உடல் எடையை குறைக்க இதை செய்யுங்கள்
* முதலில் நீங்கள் உங்கள் உணவை சமநிலைப்படுத்த வேண்டும். உணவில் எண்ணெய் மற்றும் உடலில் கொழுப்பு சேமித்து வைக்கும் பொருட்கள் சாப்பிடக்கூடாது.
* இதனுடன், பெரும்பாலான மக்கள் கோடை காலத்தில் குளிர் பானங்கள் அதிகமாக குடிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அதை உங்கள் உணவில் இருந்து விலக்கி வைக்கவும், ஏனெனில் இதை குடிப்பதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
* அதிக இனிப்புகள் மற்றும் சர்க்கரையை உட்கொள்ள வேண்டாம், ஏனெனில் அதை அதிகமாக சாப்பிடுவது உங்கள் எடையை அதிகரிக்கும்.
* பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் உங்கள் உடலுக்கு மிகவும் முக்கியம். தசைகளை சரிசெய்யும் புரதம் இதில் உள்ளது. இதனுடன் நார்ச்சத்தும் இருப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
* பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | COVID 4th Wave: ஒமிக்ரானில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க செய்ய வேண்டியவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR