கொரோனா தொற்று பரவல் தொடங்கி கிட்டத் தட்ட இரண்டு ஆண்டுகாலம் ஆகி விட்ட நிலையில், இன்று உலகம் அதன் பிடியில் இருந்து மீளவில்லை. சாமான்ய மக்கள் முதல், நாட்டில் முக்கிய தலைவர்கள் வரை அனைவரும், இதனால் நேரிடையாகவே, மறைமுகமாவோ பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது மிக அவசியம். தொற்றுநோயிலிருந்து உங்களை காக்க ஆயுர்வேதத்தின் சில நடை முறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தலாம். இது வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் அதை எதிர்த்துப் போராட உதவும்.
மஞ்சள் பால்
மஞ்சள் பால் என்பதை தங்க பால் என்றும் சொல்லலாம். ஏனென்றால், அதனை சாப்பிடுவதல உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். மஞ்சளில் காயங்களை விரைவில் ஆற்றும் குணங்கள் உள்ளன. மஞ்சள் பால் நல்ல தூக்கத்தை கொடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். மஞ்சள் பாலை தொடர்ந்து குடிப்பதால் சோர்வு குறைவதுடன் தொண்டை வலியில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். மஞ்சளில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால், அவை வீக்கத்தைக் குறைக்கின்றன. அதோடு மூளை செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
ALSO READ | Omicron: Immunity அதிகரிக்க காட்டும் அதீத ஆர்வம் கல்லீரலை டேமேஜ் செய்யும்..!!
பிராணாயாம பயிற்சி
சளி, காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று போன்ற நோய்கள் சுவாச மண்டலத்தை மோசமாக பாதிக்கிறது. எனவே நுரையீரலின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தி, அவற்றின் திறனை அதிகரிக்க யோகா பயிற்சி செய்வது அவசியம். எளிமையான பயிற்சிகள் மூலம் வலிமையான உடலை பேண முன்னோர்கள் உருவாக்கிய அற்புத பயிற்சியே மூச்சு பயிற்சி என்ற பிராணயாமம்.
சியவன்பிராஷ்
சியவன்பிராஷை (Chyawanprash) வெந்நீருடன் கலந்து சாப்பிடுவதும் உங்களுக்கு பலன் தரும். சியவன்பிராஷில் உள்ள பல வகையான மூலிகைகள் தொற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் கவசமாக செயல்படுகிறது. இரவு தூங்கும் முன் மஞ்சள் பாலுடன் கூடவே, இதனையும் சாப்பிடலாம்.
ALSO READ | Folic Acid: போலிக் அமிலம் ‘குழந்தை’ கனவை நனவாக்கும் வரப்பிரசாதம்..!!
நாசி சிகிச்சை
மூக்கில் சில துளிகள் நெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவுவதும் தொற்றில் இருந்து உங்களை காக்கும். மூக்கில் நுழையும் வைரஸ்கள் மற்றும் ஆபத்தான பாக்டீரியாக்கள் நாசி சிகிச்சை மூலம் பெரிதும் தடுக்கப்படும். வீட்டை விட்டு வெளியேறும் முன் நாசுதுவாரங்களின் எண்ணெய் தடவிக் கொண்டு செல்வது பெரிதும் உதவும். குளிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் கூட நாசியில் எண்ணெய் தடவும் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
மூலிகை தேநீர்
மூலிகை தேநீர் அதாவது மூலிகை டீ உட்கொள்வது பெரும் நன்மை பயக்கும். மூலிகை தேநீரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால், சளி-காய்ச்சலில் இருந்து பெரும் நிவாரணம் அளிக்கிறது. மூலிகை தேநீரில் துளசி, கிராம்பு, இஞ்சி, இலவங்கப்பட்டை போன்றவற்றை சேர்க்கவும். இது நோய் எதிர்ப்பு சக்தியை பெரிதும் அதிகரிக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | நோய் எதிர்ப்பு சக்தி தரும் Chyawanprash சாப்பிடுவதற்கான சரியான நேரமும், முறையும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR