இந்தியாவில் 54% பேருக்கு உடல் பருமன்... அதிர்ச்சி அளிக்கும் காரணம் இது தான்..!

Unhealthy Diet & Obesity: துரித கதியிலான வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்க வழக்கம் போன்ற காரணங்களால், இன்றைய இளம் தலைமுறையினரின் ஆரோக்கியம் கேள்விகுறியாகியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 24, 2024, 08:08 PM IST
  • உடல் பருமன் ஒரு தீவிர பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது: மத்திய அரசு
  • தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அளித்துள்ள அதிர்ச்சித் தகவல்.
  • உடல் பருமன் பிரச்சனை நகரங்களில் அதிகம் காணப்படுகிறது.
இந்தியாவில் 54% பேருக்கு உடல் பருமன்... அதிர்ச்சி அளிக்கும் காரணம் இது தான்..! title=

Unhealthy Diet & Obesity: துரித கதியிலான வாழ்க்கை முறை மோசமான உணவுப் பழக்க வழக்கம் போன்ற காரணங்களால், இன்றைய இளம் தலைமுறையினரின் ஆரோக்கியம் கேள்விகுறியாகியுள்ளது. வீட்டில் சமைத்த சுவையான உணவுகளை சாப்பிடுவதை விட, துரித உணவுகள், ரெடி டு ஈட் வகை பேக்கேஜ் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை தேடித் தேடி விரும்பி உண்கின்றனர். அதற்கு கிடைத்த பரிசுகளில் ஒன்று உடல் பருமன். இதுவே, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை தன்னுடன் சேர்த்து கொண்டு வருகிறது.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அளித்துள்ள அதிர்ச்சித் தகவல்

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS) வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம், இந்தியாவின் கிராமங்களை விட நகரங்களில் உடல் பருமன் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. நகரங்களில் ஆண்களிடையே உடல் பருமன் விகிதம் 29.8% ஆகவும், கிராமங்களில் 19.3% ஆகவும் உள்ளது.

உடல் பருமன் பிரச்சனை நகரங்களில் அதிகம் காணப்படுகிறது 

டெல்லி போன்ற பெருநகரங்களில் உடல் பருமனால் பாதிக்கப்படும் பெண்களின் விகிதம் 41.3% என்ற அளவிலும், ஆண்களின் விகிதம் 38% என்ற அளவிலும் உள்ளது. தமிழகத்தில் உடல் பருமனால் பாதிக்கப்படும் ஆண்களின் விகிதம் 37% என்ற அளவிலும், உடல் பருமனால் பாதிக்கப்படும் பெண்களின் விகிதல் 40.4% என்ற அளவிலும் உள்ளது. ஆந்திராவில் இந்த விகிதம், பெண்கள் 36.3%, ஆண்களுக்கு 31.1% என்ற அளவில் உள்ளது.

மேலும் படிக்க | இதமளிக்கும் இளநீர்: சுவை, ஆரோக்கியம், நோய்களிலிருந்து நிவாரணம் தரும் சூப்பர் ட்ரிங்க்!!

உடல் பருமன் விகிதத்தில் மூன்றாவது இடம்

இந்தியாவில் குழந்தைகளிடையே உடல் பருமன் விகிதம் மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாகவும், வியட்நாம் மற்றும் நமீபியாவிற்கு அடுத்தபடியாக இந்திய குழந்தைகளிடையே உடல் பருமன் விகிதம் அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. நாட்டின் வருங்கால தூண்களாக இருக்கும் குழந்தைகள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது ஒரு நாட்டிற்கு நல்ல செய்தியாக இருக்க முடியாது.

உடல் பருமன் ஒரு தீவிர பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது: மத்திய அரசு

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தால் இந்தியாவின் மக்கள் தொகையில் 54% பேர் பல்வேறு உடல்நல பிரச்சனையினால் அவதிப்படுவதாக புதிய பொருளாதார ஆய்வு கூறுகிறது. சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பொருளாதார ஆய்வு ஆயவறிக்கையில், “இந்தியாவின் வயது வந்தோர் மத்தியில் உடல் பருமன் ஒரு தீவிர பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது” என கூறப்பட்டுள்ளது. ஆரோக்கியமான மக்கள் தான் பொருளாதாரத்தை மேம்படுத்த பங்காற்ற முடியும். எனவே இந்தியா தனது மக்கள்தொகை பலத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால், மக்கள் ஆரோக்கியமான உணவு முறையை நோக்கி நகர்வது முக்கியம் என பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துரித உணவுகள் தொடர்பான ஐசிஎம்ஆர் அறிக்கை

சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் துரித உணவுகளையும் அதிக அளவில் உட்கொள்வதால் மக்களின் உடல் செயல்பாடு குறைந்து விட்டது என்றும் இதனால் ஏற்படும் ஊட்டசத்து குறைபாடு காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையை மேற்கோள் காட்டி, பொருளாதார ஆய்வு, கூறியுள்ளது. பல்வேறு வகையான உணவு வகைகளை உண்ணும் பழக்கமும் கைவிட்டு போய்விட்டதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் சேரும் நச்சுக்களை செலவில்லாமல் நீக்கும் சூப்பர் ட்ரிங்க்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News