Side Effects of Chia Seeds: திருநீற்றுப் பச்சிலை விதைகள் எனப்படும் சியா விதைகள், மிகச் சிறிய அளவில் கருப்பு நிறத்தில் இருக்கும். இனிப்பு சுவை கொண்ட இந்த விதைகள் ஏராளமான ஊட்டசத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. கரையும் நார்சத்து கொண்ட சியா விதைகள், கொழுப்பையும் கொல்ஸ்ட்ராலை எரித்து, உடல் பருமனை குறைக்கும் ஆற்றல் கொண்டவை. இதனை ஊற வைத்து உட்கொள்வதினால், செரிமானம் மேம்படும். வயிறு உப்புசம், வாயு போன்ற குடல் பிரச்சினைகளை போக்கும்.
சியா விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
சியா விதைகளில் அதிக அளவிலான நார்ச்சத்து, நல்ல அளவு புரதம், பொட்டாசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம், கால்சியம் போன்ற பல வைட்டமின்களும் மற்றும் தாதுக்களும் காணப்படுகின்றன. சியா விதைகளை பாலில் ஊறவைப்பது அதில் உள்ள நார்ச்சத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இந்த பாலை அருந்துவதன் மூலம் இரத்த நாளங்களில் சேர்ந்துள்ள கொழுப்பு கரையும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையை போக்கி, இதய நோய் அபாயத்தை நீக்கும் ஆற்றல் கொண்டது சியா விதைகள். எனினும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அந்த வகையில், சியா விதைகளை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து கொள்ளலாம்.
சியா விதைகளின் பக்க விளைவுகள்
சியா விதைகளை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்தில், எந்த வகையில் தீங்கு விளைவிக்கும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அதோடு சியா விதைகள் அனைவருக்கும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்பதும் அவசியமில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
வாயு - அசிடிட்டி பிரச்சனை
பல சமயங்களில் சியா விதைகளை சாப்பிட்ட பிறகு வாயுத் தொல்லை, ஆசிடிட்டி, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். சியா விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அளவிற்கு அதிக நார்சத்து செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
மேலும் படிக்க | சர்க்கரை நோய் - இதய நோய் ஆபத்தை அதிகரிக்கும் சில உணவுகள்... எச்சரிக்கும் ICMR
செரிமான ஆரோக்கியம் பாதிக்கும்
சியா விதைகளை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது வயிற்றில் எரிச்சல் உணர்வு, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை, பெருங்குடல் அழற்சி நோய் போன்ற அபாயத்தை ஏற்படுத்தும்.
வாந்தி மற்றும் குமட்டல்
சில நேரங்களில் சிலருக்கு சியா விதைகள் ஒவ்வாமை இருக்கலாம். இதனால், சிலருக்கு வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் நாக்கு அல்லது உதடுகளில் அரிப்பு ஏற்படலாம். அத்தகையவர்கள் சியா விதைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
குறைந்த இரத்த அழுத்தம்
குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், சியா விதைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். சியா விதைகளில் காணப்படும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தை மெலிதாக்கி இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
நாள் ஒன்றுக்கும் எவ்வளவு சியா விதைகளை சாப்பிடலாம்?
எடை இழப்புக்காக நீங்கள் சியா விதைகளை சாப்பிடுகிறீர்கள் என்றால், அதனை அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். நாள் ஒன்றுக்கு சியா விதைகளை 1-2 தேக்கரண்டி மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். இது பசியை ஏற்படுத்தாது மற்றும் எடையைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மாரடைப்பு வராமல் காக்கும் சூப்பர் உணவுகள்: மருத்துவரே பகிர்ந்த தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ