Weight Loss Tips: உடல் எடையை குறைக்க ஒரு ஜாலியான வழி இருக்கு, செஞ்சு பாருங்க

ஸ்கிப்பிங் செய்வதால், உடல் எடை குறைவதோடு மட்டுமல்லாமல், இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் ஏற்படும். உடல் எடையை குறைக்க நீங்கள் எவ்வளவு நேரம் ஸ்கிப்பிங்க் செய்ய வேண்டும்? இதனால் ஒரு நாளில் எத்தனை கலோரிகளை இழக்கலாம்?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 29, 2021, 06:28 PM IST
  • 15 முதல் 20 நிமிடங்கள் தொடர்ந்து ஸ்கிப்பிங் செய்வது உடல் பருமனைக் குறைக்கும்.
  • ஸ்கிப்பிங் செய்வது சகிப்புத்தன்மையை அதிகரிக்கும்.
  • தினமும் 10 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்வதால் இரத்த ஓட்டம் மேம்படும்.
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க ஒரு ஜாலியான வழி இருக்கு, செஞ்சு பாருங்க title=

Weight Loss Tips: நம்மில் பலர் உடல் எடையை குறைக்க விரும்புகிறோம். ஆனால் நேரமின்மை காரணமாக பலரால்,  நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முடிவதில்லை. 

வெறும் 15-20 நிமிடங்களில் உங்கள் உடல் முழுவதற்குமான ஒரு உடற்பயிற்சியைப் (Exercise) பற்றி இந்த பதிவில் காணலாம். சிறிது நேரம் தொடர்ந்து ஸ்கிப்பிங் செய்தால், உடல் எடை எளிதாக குறைவதோடு இன்னும் பல நன்மைகளும் ஏற்படும். 

ஸ்கிப்பிங் செய்வதால், உடல் எடை குறைவதோடு மட்டுமல்லாமல், இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் ஏற்படும். உடல் எடையை குறைக்க நீங்கள் எவ்வளவு நேரம் ஸ்கிப்பிங்க் செய்ய வேண்டும்? இதனால் ஒரு நாளில் எத்தனை கலோரிகளை இழக்கலாம்? இவை அனைத்துக்கும் இந்த பதிவில் விடை அறியலாம். 

ஸ்கிப்பிங் செய்வதால், உடல் எடை இழப்புக்கு (Weight Loss) அதிக பலன் கிடைக்கிறது. உடற்பயிற்சி நிபுணர்களின் கூற்றுப்படி, 15 முதல் 20 நிமிடங்கள் தொடர்ந்து ஸ்கிப்பிங் செய்வது உடல் பருமனைக் குறைக்கும். 

ஸ்கிப்பிங் செய்வதால், உங்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இது குழந்தைகளுக்கான விளையாட்டாக இருந்தாலும், பெரியவர்களின் ஃபிட்னசை பராமரிக்கவும் இது உதவுகிறது. நீங்கள் தினமும் 10-15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்தால், உங்கள் உடல் 200-250 கலோரிகள் வரை இழக்கக்கூடும். ஸ்கிப்பிங் செய்வது சகிப்புத்தன்மையை அதிகரிக்கும்.

ஸ்கிப்பிங் செய்வதன் பிற நன்மைகள்

1- தினமும் 10 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்வதால் இரத்த ஓட்டம் மேம்படும். 

2- ஸ்கிப்பிங் செய்வது இதய நோய்களின் (Heart Care) அபாயத்தையும் குறைக்கிறது.

3- ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் மாரடைப்பு, மனச்சோர்வு போன்ற நோய்களையும் சமாளிக்க முடியும்.

ALSO READ:Health News: பச்சை மிளகாயில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா!! 

4- ஸ்கிப்பிங் செய்வது குழந்தைகளின் உயரத்தையும் அதிகரிக்கும். ஆகையால் சிறு குழந்தைகள் அதிக நேரம் ஸ்கிப்பிங்க் செய்வது நல்லது. 

5- ஸ்கிப்பிங் செய்வது எலும்புகளை வலுப்படுத்தவும் முழங்கால்களின் வலியை நீக்கவும் உதவுகிறது.

ஸ்கிப்பிங்க் செய்யும்போது போது இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்

1- வெறும் வயிற்றில் ஸ்கிப்பிங் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால், வயிற்றில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. 

2- உணவு சாப்பிட்ட உடனேயே ஸ்கிப்பிங்க் செய்யக்கூடாது. உணவு உட்கொண்ட பிறகு சுமார் 2 மணி நேரம் கழித்தே செய்ய வேண்டும். 

3- ஸ்கிப்பிங் செய்வதற்கு முன் லேசான உடற்பயிற்சிகளை செய்வது நல்லது. இது உடலை ஸ்கிப்பிங்கிற்கு தயார் செய்யும்.

ALSO READ:Health News: கொண்டைக் கடலையின் அற்புதமான ஊட்டச்சத்துகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News