Yoga Asanas For Legs : நம் உடலில், அனைத்து பாகங்களுக்கும் சரியாக ரத்த ஓட்டம் சரியாக செல்வது அவசியமாகும். கால்களுக்கு சரியாக ரத்த ஓட்டம் செல்லவில்லை என்றால் அது பெரும் பிரச்சனைகளில் கொண்டு சென்று விட்டுவிடும் என கூறுகின்றனர் மருத்துவர்கள். இதனால், காலில் ஏற்பட்டிருக்கும் சிறு சிறு காயங்கள் கூட, ஆறாமல் இருக்குமாம். இதுவே பெரிய புண்ணாக மாறி, பிரச்சனையை உண்டாக்கலாம். இது போன்ற பிரச்சனைகளை தடுப்பதற்கு, சில யோகாசனங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
1.விபரீத காரணி:
மன அழுதத்தை போக்க, உடலில் ஏற்பட்ட காயங்களை சரிசெய்ய, பலர் இந்த யோகாசனம் உதவுவதாக கூறுகின்றனர். இது காலுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, நரம்பு தொடர்பான பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவுவதாக கூறப்படுகிறது. இதனால், தலைவலி, தசை வலி ஆகியவையும் நீங்கும் என கூறப்படுகிறது.
எப்படி செய்ய வேண்டும்?
>உங்கள் பின்பகுதி சுவரின் அடிப்பகுதியில் படுபடு படுக்கவும்.
>கைகளை தலைக்கு மேலாக தூக்கி, நேராக தரையில் வைக்கவும்.
>இரு கால்களையும் சுவற்றில் நேராக வைக்கவும்.
இப்படி, 5-10 நிமிடங்கள் வரை இருக்கலாம்.
2.அதோ முக்கா ஸ்வானாசனம்:
உடல் தசைகளுக்கு வலு சேர்க்கும் யோகாசனங்களுள் ஒன்று, அதோ முக்கா ஸ்வானாசனம்.
எப்படி செய்ய வேண்டும்?
>மண்டியிட்டு, கை பாதங்களை தரையில் வைத்து அமரவும்.
>மெதுவாக உங்கள் பாதங்களால் நின்று, உங்கள் கைகள் தரையில் நேராக இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும்.
>உங்கள் இடுப்பு பகுதியை மேல் நோக்கி தூக்கி v வடிவில் உங்கள் உடல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
3.உட்கட்டாசனம்:
கால் தசைகளை வலுவாக்குவதற்கும், உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கும் உதவும் ஆசனம் இது.
எப்படி செய்வது?
>நாற்காலியில் அமர்வது போல உடலை மெதுவாக கீழே கொண்டு வர வேண்டும்.
>உங்கள் எடை முழுவதையும் குதிக்காலில் உணர வேண்டும்.
>இதை செய்யும் போது உங்கள் கைகள் மேல்நோக்கி இருக்க வேண்டும்.
>இது போல 20 விநாடிகள் இருக்க வேண்டும்.
>சாதாரண நிலைக்கு வந்து சிறிது விநாடிகளுக்கு பிறகு, மீண்டும் 20 விநாடிகள் இதை செய்ய வேண்டும். இப்படியே 3 முறை செய்யலாம்.
4.பாதஹஸ்தாசனம் :
பாதம் என்பதற்கு கால்கள் என்று அர்த்தம், ஹஸ்தம் என்றால் அதற்கு கை என்று பொருள். இந்த யோகாசனத்தை கால் மற்றும் கைகளை ஒன்றாக வைத்து செய்ய வேண்டும் என்பதால் இதற்கு பாதஹஸ்தாசனம் எனும் பெயர் வந்திருக்கிறது.
மேலும் படிக்க | தொப்பையை குறைக்கணுமா? இந்த 5 யோகாசனம் போதும், சட்டுனு எடை குறையும்
எப்படி செய்வது?
>தரையில் உங்கள் கால்களை சேர்த்து வைக்க வேண்டும்.
>கைகளை இரு பக்கங்களிலும் கொண்டு வந்து தலைக்கு மேலே காதுகளை ஒட்டியவாறு நீட்ட வேண்டும். இதை செய்கையில் கைகள் மடங்க கூடாது.
>மெதுவாக மூச்சை வெளியே விட்டு, முன்னால் குனிந்து காலை தொட வேண்டும்.
>முடிந்தால் கால்களுக்கு பின்னாலும் தொடலாம். இதை செய்கையில் கால்கள் மடங்க கூடாது.
5.ஜானு சிரசாசனம்:
இது ஒரு காலை மடக்கி வைத்து செய்யப்படும் ஆசனம் ஆகும். இதனை ஸ்ட்ரெட்சிங் என்றும் ஆங்கிலத்தில் கூறுவர்.
எப்படி செய்வது?
>ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை நீட்டி தரையில் அமர வேண்டும்.
>உங்கள் முதுகை நேராக வைத்து மூச்சை இழுத்து விட வேண்டும்.
>இடுப்பால் முன்னோக்கி நகர வேண்டும்.
>உங்கள் கட்டை விரலை தொட முயற்சிக்கவும்.
>இந்த நிலையில் 30 விநாடிகள் முதல் 1 நிமிடம் வரை இருக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | யோகாசனம் செய்ய தெரியாதவர்களுக்கான ஆசனங்கள்! சிம்பிளாக இருக்கும் ட்ரை பண்ணுங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ