Foods vs Lungs: நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் 5 உணவு வகைகள்

 கொரோனா காலத்தில் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிக முக்கியமானதாகிவிட்டது. குறிப்பாக நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம், கொரோனா வைரஸ் முதலில் நுரையீரலை தான் குறிவைக்கிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 25, 2021, 06:13 PM IST
  • நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் 5 உணவுகள்
  • கொரோனா வைரஸ் முதலில் நுரையீரலை தான் தாக்குகிறது
  • ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கும் பணியை செய்வது நுரையீரல்
Foods vs Lungs: நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் 5 உணவு வகைகள் title=

உணவே மருந்து என்பது நம் முன்னோர் வாக்கு. மருந்தாகும் உணவே, உடலுக்கு தீங்கை விளைவிக்கும் முக்கிய காரணியாகிறது. உடலின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவு வகைகளை தெரிந்துக் கொண்டு, அவற்றை தவிர்த்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

நுரையீரலுக்கு நேரடி சேதத்தை ஏற்படுத்தும் உணவுகளை முழுமையாக தவிர்க்க முடியாவிட்டாலும், அவற்றை அளவுடன்  உட்கொள்வது பலன் தரும். நுரையீரலை (lungs) ஆரோக்கியமாக வைத்திருக்க, உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். நுரையீரலை சேதப்படுத்தும் உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
 
நீண்டகாலத்திற்கு நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், இந்த செய்தி உங்களுக்குப் பயன்படும். கொரோனா காலத்தில் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிக முக்கியமானதாகிவிட்டது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். குறிப்பாக நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம், ஏனென்றால் கொரோனா வைரஸ் முதலில் நுரையீரலை தான் குறிவைக்கிறது.

Also Read | Aluminium Foil: ஆண்மை குறைபாடு முதல், சிறுநீர்க நோய் வரை; வெளியான பகீர் தகவல்..!!

நுரையீரலின் வேலை என்ன?
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நுரையீரல் குறுகுவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.  நமது சுவாசத்தில் நமது நுரையீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. நுரையீரல் ஆக்ஸிஜனை வடிகட்ட வேலை செய்கிறது, நுரையீரலில் இருந்து வடிகட்டப்பட்ட பிறகுதான், ஆக்சிஜன் முழு உடலையும் சென்றடைகிறது. எனவே உடலுக்குத் தேவையான உயிர்காற்றை வழங்கும் பணியை மேற்கொள்ளும் நுரையிரலை ஆரோக்கியமாக வைத்திருக்க ஆரோக்கியமான உணவு அவசியம் என்று உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். 

நுரையீரலை பலவீனமாக்கும் சில உணவுவகைகளை உண்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். புகைபிடித்தல் மற்றும் புகையிலை தவிர, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் அதிகப்படியான ஆல்கஹால் குடிப்பதால் நுரையீரல் சேதமடையலாம். எனவே அவற்றை உட்கொள்ள வேண்டாம்.

நுரையீரல் சேதப்படுத்தும் உணவுகள்

உப்பு
உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகையில், உப்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக கருதப்படுகிறது, ஆனால் அதை அதிகமாக உட்கொண்டால், அது நுரையீரல் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். எனவே, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளவும்.  

ALSO READ | ஆகஸ்ட் 24 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு

சர்க்கரை கலந்த பானங்கள்
எப்போதும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால், சர்க்கரை பானங்களிலிருந்து விலகி இருங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  சர்க்கரைஐ தொடர்ந்து சாப்பிடுவதால் மூச்சுக்குழாய் அழற்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. சர்க்கரை பானங்களுக்கு பதிலாக, அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
இறைச்சியைப் பாதுகாக்க நைட்ரைட் என்ற தனிமம் சேர்க்கப்படுகிறது. அது, நுரையீரலில் வீக்கம் மற்றும் பதற்றத்தை ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பால் பொருட்கள்
பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அவற்றை அதிகமாக உட்கொண்டால், அவை நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, பால் பொருட்களை ஒரு அளவிற்கு மட்டுமே உட்கொள்ள வேண்டும். 

மது அருந்துதல்
ஆல்கஹால் உங்கள் உடலின் எதிரி. இது நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும். இதில் உள்ள சல்பைட்டுகள் ஆஸ்துமாவின் அறிகுறிகளை மோசமாக்கும். ஆல்கஹாலில் உள்ள எத்தனால், நுரையீரலை சேதப்படுத்தும்.

Also Read | Coconut Water: இளநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News