எச்சரிக்கை! விட்டமின் டி குறைந்தால்... முதுகெலும்பில் நீர் நிரம்பும்!

வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்த மிகவும் தேவையான ஒரு ஊட்டசத்து. அதன் குறைபாட்டால், எலும்புகள் வலுவிழந்து, அவற்றை நீர் நிரம்பி விடும். இதன் காரணமாக, எலும்புகளைச் சுற்றி வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 26, 2023, 07:41 PM IST
  • முதுகுத் தண்டுவடத்தில் நீர் ஏன் நிரம்புகிறது.
  • எடிமா காரணமாக, உடலில் எங்கும் தண்ணீர் நிரப்பத் தொடங்குகிறது.
  • எலும்புகளில் நீர் நிரம்பும் காரணம்
எச்சரிக்கை! விட்டமின் டி குறைந்தால்... முதுகெலும்பில் நீர் நிரம்பும்! title=

எலும்பு பலவீனம் மிகவும் ஆபத்தானது. இதனால், நடக்கவும், எழவும், உட்காரவும்  முடியாமல், அன்றாட வாழ்க்கையே சவாலானதாக மாறும் ஆபத்து உள்ளது. நீங்கள் இன்னும் உங்கள் உணவில் கவனம் செலுத்தவில்லை என்றால், எலும்புகளில் தண்ணீர் நிரப்பப்படலாம். இதன் காரணமாக, எலும்புகளைச் சுற்றி வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.

முதுகுத் தண்டுவடத்தில் நீர் ஏன் நிரம்புகிறது: எலும்புகளில் நீர் நிரம்பும் பிரச்சனை முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படுகிறது, இது எலும்பு மஜ்ஜை எடிமா என்று அழைக்கப்படுகிறது. எடிமா காரணமாக, உடலில் எங்கும் தண்ணீர் நிரப்பத் தொடங்குகிறது. வைட்டமின் D இன் குறைபாடு முதுகுத் தண்டுவடத்தில் திரவத்தை நிரப்புவதற்கு வழிவகுக்கும் என்பது பல ஆராய்ச்சிகளில் கவனிக்கப்பட்டுள்ளது. 2022 இல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு குறிப்பு அதையே கூறுகிறது.

எலும்புகளில் நீர் நிரம்பும் காரணம்

1. கடுமையான காயம் காரணமாக எலும்பு முறிவு
2. கீல்வாதம்
3. புற்றுநோய்
4. எலும்பு தொற்று

எலும்பில் நிரம்பிய தண்ணீரை அகற்றுவது எப்படி?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், எலும்பில் உள்ள நீர் பிரச்சனை சிகிச்சை, ஓய்வு மற்றும் மருந்துகளின் உதவியுடன் சரி செய்யப்படலாம். ஆனால் சில சந்தர்ப்பங்களில், இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. எக்ஸ்ரே மூலம் இந்த பிரச்சனை கண்டறியப்படாது. எம்ஆர்ஐ அல்லது அல்ட்ராசவுண்ட் மூலம் தான் பிரச்சனை கண்டறியப்பட முடியும்.

வைட்டமின் டி குறைபாடு ஏற்பட அனுமதிக்காதீர்கள்

உடலில் வைட்டமின் டி குறைபாடு முதுகுத் தண்டுவடத்தில் நீர் நிரப்பும்.  வைட்டமின் டி குறைபாடு காரணமாக, எலும்புகள் பலவீனமடைந்து, எலும்பு முறிவு அபாயம் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அதனால் இந்த வைட்டமின் குறைய வேண்டாம்.

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... கொழுப்பை எரிக்கும் ‘சில’ உணவுகள்!

வைட்டமின் டி குறைபாட்டை போக்கும் சூரிய ஒளி

வைட்டமின் டி பெற சிறந்த வழி சூரிய ஒளி. இதன் காரணமாக, போதுமான அளவு வைட்டமின் டி சப்ளை உடலுக்கு கிடைக்கும். சூரிய ஒளியில் நடப்பதன் மூலம், சூரியனின் கதிர்கள் உடலைத் தொட்டு, உடல் வைட்டமின் டி சத்தை தயாரிக்கத் தொடங்குகிறது. குறைந்த ஆடைகளில் காலை அல்லது மாலை 10-15 நிமிடங்கள் சூரிய ஒளியை அனுபவித்தால் விட்டமின் டி குறைபாடு இருக்காது.

வைட்டமின் டி  நிறைந்த உணவுப் பொருட்கள்

சூரிய ஒளியைத் தவிர, வைட்டமின் டி சில உணவுப் பொருட்களிலும் வருகிறது. தொடர்ந்து பின்வரும் உணவுகளை உண்ணுங்கள்.

பால் 

பசும்பாலில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ரிபோஃபிளவின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதே போல பாதாம் பால், சோயா பால் ஆகியவற்றிலும் கூட வைட்டமின் டி கிடைக்கும்.

சால்மன் மீன்

கடல் உணவுகளில் ஒமேகா 3 அதிக அளவில் இருப்பதைப் போல வைட்டமின் டியும் நிறைந்திருக்கிறது. குறிப்பாக சால்மன் மீன் வகைகளில் அதிக அளவு புரதச்சத்துடன் சேர்த்து வைட்டமின் டி மற்றும் அமினோ அமிலங்களும் நிரம்பியிருக்கின்றன.

முட்டை கரு

முட்டையில் அதிகப்படியான அளவு புரதங்களும் வைட்டமின்களும் தாதுக்களும் இருப்பதைப் போலவே வைட்டமின் டி - யும் அதிகமாாக இருக்கிறது. குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி அதிகமாகக் காணப்படுகிறது.

காளான்

சைவ உணவுகளில் மிக அளவில் வைட்டமின் டி நிறைந்திருக்கிற ஒரே காய் காளான் தான். இதில் அதேபோல ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் மினரல்களும் கூட அதிகமாக இருக்கின்றன.

ஆரஞ்சு சாறு

வைட்டமின் டி  சத்தை பெறுவதற்கான சப்ளிமெண்ட்டாக ஆரஞ்சு ஜூஸை எடுத்துக் கொள்ளலாம். மேற்கத்திய நாடுகளில் போதிய வைட்டமின் டி யை பெறுவதற்கு அதிகமாக பால் எடுத்துக் கொள்ளவற்கு பதிலாக ஆரஞ்சு ஜூஸை எடுத்துக் கொள்கிறார்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய.. காலை உணவில் சேர்க்க வேண்டியதும்... சேர்க்க கூடாததும்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News