எடை குறைப்பு குறிப்புகள்: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். மக்கள் தங்கள் உடல் எடையை பராமரிக்க பல வழிகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க, ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள், டயட்டில் இருக்கிறார்கள். இருப்பினும், பல சமயங்களில், இவற்றாலும் எந்த நல்ல பலனையும் பெறுவதில்லை. எனினும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் நம் உடல் எடையை குறைக்கலாம்.
உடல் எடையை குறைக்கும் காளான் நன்மைகள்:
இன்றைய அவசர வாழ்க்கையில் சீரற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையால் மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதில் ஒன்று உடல் பருமன். ஒருவரின் உடல் பருமன் அதிகரிக்கத் தொடங்கும் போது, அதனுடன் பல நோய்களும் அவரைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்கும். இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட பக்கவிளைவுகள் இல்லாத எளிய முறையில் நாம் உடல் எடையை குறைக்க முயற்சிப்பது நல்லது. அப்படிப்பட்ட ஒரு எளிய, இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். இதன் மூலம் நீங்கள் உங்கள் உடல் எடையை சில நாட்களிலேயே கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
காளான் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இதில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல நல்ல சத்துக்கள் உள்ளன. இதுமட்டுமல்லாமல், உடல் எடையை குறைக்கும் பயணத்திலும் காளான் உங்களுக்கான ஒரு நம்பகமான துணையாக இருக்கும். காளான் உட்கொள்வது உடல் எடையை குறைக்க பின்பற்றப்படும் பாரம்பரிய வழிகளில் ஒன்றாகும். காளான் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதை உணவில் எப்படி சேர்த்துக்கொள்ளலாம் என்பதை பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
மேலும் படிக்க | அப்பா ஆகும் கனவு நிறைவேற வேண்டுமா... ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
உடல் எடையை குறைக்க, காளானை உணவில் இந்த வகைகளில் சேர்க்கலாம்:
1. காலை உணவில் காளானை சேர்த்துக்கொள்ளுங்கள்
உங்கள் எடை அதிகமாக அதிகரித்திருந்தால், காளான்கள் அதைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு காலை உணவில் காளான் சாப்பிட வேண்டும். காலை உணவில் காளான் துண்டுகளை சாப்பிடுங்கள். சத்தான உணவு வகைகளில் இதுவும் ஒன்று. காலை உணவில் முட்டை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் ஆம்லெட்டில் நறுக்கிய காளான்களைச் சேர்க்கலாம்.
2. காளான் சாலட்
உங்கள் மதிய உணவில் நீங்கள் எளிதாக காளான்களை சேர்க்கலாம். இதற்கு காளான்களை அதிக தீயில் லேசாக சமைத்து சாலட் செய்யவும். இது தவிர காளான் குழம்பும் செய்யலாம். பட்டாணி மற்றும் காளான் போட்டு கறியாக செய்தும் உட்கொள்ளலாம்.
3. காளான் சூப்
உடல் எடையை குறைக்க காளான் மிகவும் பயனுள்ள ஒரு உணவுப்பொருளாக உள்ளது. மாலை வேளைகளிலும் இதை உட்கொள்ளலாம். மாலை நேர சிற்றுண்டியாக இதை உட்கொள்ள, காளான் சூப் செய்து குடிக்கவும். இதற்கு, வழக்கமான முறையில் சூப் தயார் செய்து, அதில் காளான்களை சேர்க்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கவும். எடை இழப்பு முயற்சியில் இது மிகவும் உதவியாக இருக்கும்.
4. வேகவைத்த காளான்கள்
காளான் கறி, சூப் தவிர காளான் கொண்டு இன்னும் பல சுவையான உணவுகளையும் செய்யலாம். காளான் பிரவுன் அரிசியை (மஷ்ரூம் ப்ரவுன் ரைஸ்) உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது தவிர, காளான்களை வேகவைத்தும் மற்ற உணவுகளில் சேர்க்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கமா... இந்த உணவுகளை முற்றிலும் தவிருங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ